பிரிட்டிஷ் திரைப்படத்துக்கு கென்யா தடை

பட மூலாதாரம், Universal Pictures
பிரிட்டிஷ் காம ரச நாவலான " பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே"ஐ ( Fifty Shades of Grey) தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தை கென்யா தடை செய்திருக்கிறது.
இந்தத் தடைக்கு காரணம் எதையும் கென்யாவின் திரைப்படத் தணிக்கை வாரியம் கூறவில்லை ஆனால் இது பொதுவாக பாலியல் ரீதியில் வெளிப்படையான படங்களை தணிக்கை செய்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கென்யா பெரும்பாலும் ஒரு பழமைவாத கிறித்தவ நாடு.
இந்தப் படம் ஏற்கனவே மலேசியா மற்றும் இந்தோனேஷியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு மாணவன் மற்றும் பாலியல் ரீதியில் புதிய அனுபவங்களைத் தேடிச் செல்லும் தொழில் முனைபவர் ஒருவர் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் இன்று ( புதன்கிழமை) பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் முன்கூட்டியே திரையிடப்பட்டு அதன் பின்னர் உலக அளவில் வெளியிடப்படவிருக்கிறது.

























