BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முக்கிய நகரங்களில் எதிர்க்கட்சிகள் போராட்டம் - 42 முன்னாள் நீதிபதிகளின் கடிதம் கூறுவது என்ன?
இந்தியாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. என்ன நடக்கிறது?
சாட்ஜிபிடி மூலம் 1980-கள் போன்ற தோற்றத்தை பெற நீங்கள் கொடுத்த விலை என்ன தெரியுமா?
உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள், தங்கள் செல்ஃபிக்களை ரெட்ரோ பாணியில் மாற்றுவதற்காக சாட்ஜிபிடி மற்றும் பிற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பயனர்கள் தாங்கள் உணர்வதை விட மிக அதிகமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
அசுரன் பட நடிகர் சரண்ராஜ் இறப்புக்கு காரணம் விபத்தா அல்லது கொலையா? சிசிடிவி காட்சியால் திருப்பம் - நீதிமன்ற உத்தரவு விவரம்
'தனது மகனின் இறப்பு விபத்து அல்ல திட்டமிட்ட கொலை' என்று கூறி வரும் தாய் மாரியம்மாள் மூன்றாண்டுகளாக நீதிமன்றத்தின் வாயிலாக போராடி வருகிறார்.
பாகிஸ்தான் தயாரித்துள்ள ஃபதே-4 இஆர் குரூயிஸ் ஏவுகணை எவ்வளவு தூரம் தாக்கும்? சிறப்பு அம்சங்கள் விவரம்
உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஃபதே-4 குரூயிஸ் ஏவுகணையின் புதிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய பதிப்பை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது தரையிலிருந்து ஏவப்படும் ஒரு குரூயிஸ் ஏவுகணை ஆகும்.
'அண்ணன் சீர்' திட்டம் 'வரதட்சணையை' நினைவூட்டுகிறதா? ஆதரவுடன் எதிர்ப்பும் எழுவது ஏன்?
'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்குவதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன?
காணொளி, சென்னை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார், கால அளவு 0,33
சென்னை திருவான்மியூர் தரமணி – டைடல் பார்க் அருகே உள்ள பிரதான சாலையில் கடந்த மே மதம் முதலே பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடை
சென்னைக்கு எழுத்தராக வந்து, பின் ராணுவ வீரராகி 'ராபர்ட் கிளைவ்' வரலாற்றில் தடம் பதித்த கதை
கிழக்கிந்திய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்த ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கான அடித்தளத்தை அமைத்த முக்கிய ராணுவ வெற்றிகளை சாத்தியமாக்கியது எப்படி?
இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் - வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
கருங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர் தொடர்பான எதிர்க் கட்சிகளின் போராட்டம் பற்றி பாகிஸ்தான், பிரிட்டனில் பேசப்படுவது என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம், இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.
நானா படேகர் காலமானார்: 'காலா'வில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவரின் திரைப் பயணம்
பிரபல நடிகர் நானா படேகர் 75 வயதில் காலமானார். ஊடக செய்திகளின்படி, கோவாவில் அவர் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் '9 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்' - அடுத்த கோடையில் இளநீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
தமிழ்நாட்டில் வெப்பம் கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், இளநீர் தடுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா?
'சோறு சாப்பிடுவதை நிறுத்தி 40 ஆண்டாகிவிட்டது' - இவரது வைராக்கியத்திற்கு என்ன காரணம்?
"எனக்கு அவரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். முறையான உணவை உட்கொள்ளாத நிலையிலும் அவர் உற்சாகமாகவே காணப்படுகிறார். அவருடைய வீட்டில் அரிசி, எண்ணெய், மசாலாப் பொருட்கள் அல்லது சமையல் பாத்திரங்கள் எதையும் காண முடியாது; நிலக்கடலை, வெல்லம் மற்றும் தேயிலைத் தூள் மட்டுமே அங்கு இருக்கும்" என்று நரஹரி என்ற கிராமவாசி கூறினார்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
இந்தியாவில் ஜென் ஸி அணுகுமுறையால் மாறும் சூழல் அரசியல் மாற்றத்திற்கு வித்திடுமா?
"இன்று வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பாஜக வாக்காளர்களின் குழந்தைகள். அவர்களின் பெற்றோர் நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். இந்தப் பிரிவில் பெரும்பான்மையான பெண்களின் வாக்குகளும் அடங்கும். குறிப்பாக, இந்தப் பெண்கள்தான் நரேந்திர மோதியின் ஆதரவுத் தளத்தை உருவாக்கினர்"
எல்நினோ எதிரொலி: இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா?
எல் நினோ தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், 2026–27ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் இந்தியாவில் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சவாலாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுநீர் வெளியேற தாமதம், கழித்த பிறகும் முழுமையடையாத உணர்வு போன்ற அறிகுறிகள் உள்ளனவா? ஆண்களுக்கான 8 முக்கிய விஷயங்கள்
ஆண்களுக்கு சிறுநீர் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன? புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவது, சிறுநீர்க்குழாய் குறுகுவது, புரோஸ்டேட் தொற்று மற்றும் சிறுநீர்ப்பை நோய் ஆகியவற்றை மருத்துவர்கள் எவ்வாறு வேறுபடுத்திக் கண்டறிகின்றனர்? உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அறிகுறிகள் எவை? இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
உங்கள் ஓட்டுநர் உரிமம் எந்த 6 விதிமீறல்களுக்காக இடைநீக்கம் செய்யப்படலாம் தெரியுமா?
எத்தகைய விதிமீறல்கள் நடக்கும்போது ஒருவரின் ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும், எப்போது ரத்து செய்யப்படும்? செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்படுமா?
'வெற்றிப் பயணம்': தமிழ்நாட்டில் பெண்கள் எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் ஒருவர் எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம், எந்தெந்த பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று இந்த கட்டுரை விவரிக்கிறது.
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
"என்னுடைய சிறு வயதிலேயே என் தாயார் இறந்துவிட்டதால் விடுதியில் தங்கிப் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு தந்தையுடன் தங்கியிருந்த போது அருண்குமாரை சந்தித்தேன். அவருடன் இந்தியாவில் வாழ்வது என முடிவெடுத்தேன்"
சௌதியிடம் 'நபிகள் மன்னித்ததை நினைவுபடுத்திப் பேச வேண்டும்' - சிவராசா அனோஜனை மீட்க இருக்கும் வழிகள்
நபிகள் நாயகத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, சௌதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த சிவராசா அனோஜன் என்ற இலங்கையருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளமை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அவரை மீட்க இருக்கும் வழிகள் என்ன?
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
இந்திய விமானப் பணியாளர்களின் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் பதிவாகியுள்ள ஒரு சம்பவமும் உள்ளது. அது நீரஜா பானோட்டின் கதை. 1986-ஆம் ஆண்டு கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் அவர் மூத்த விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார் . தனது புத்திசாலித்தனம் மற்றும் துணிச்சலால் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைக் காப்பாற்றிய நீரஜா, கடத்தல்காரர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு தானும் பலியானார்.
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா? எண்ணெய் ஏற்றுமதி தரவு உணர்த்தும் உண்மை
கடந்த சில வாரங்களாகப் பாரசீக வளைகுடாவில் உள்ள அரபு நாடுகள், எண்ணெய் டேங்கர்களின் நடமாட்டத்தை அதிகரிப்பதன் மூலமும், மாற்றுப் பாதைகளைப் பெருமளவில் பயன்படுத்துவதன் மூலமும் தங்களின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை இரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலைக்கு மீட்டமைக்க முடிந்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா?
அமெரிக்கா படையெடுத்தால் அதை எதிர்கொள்ள கனடா எவ்வாறு தயாராகிறது?
கனடாவின் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும், அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது குறித்த ராணுவ ஒத்திகைகளை நடத்தி வருவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்
சீன இறக்குமதியை ஆபத்தான வகையில் சார்ந்திருக்கும் இந்தியா - எப்படி தெரியுமா?
"தற்போது இந்தியாவின் தொழில்துறை இறக்குமதிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை சீனா வழங்குகிறது. 100-க்கும் மேற்பட்ட முக்கியமான பொருட்களுக்கு இந்தியா சீனாவையே சார்ந்துள்ளது. இந்தச் சமநிலையற்ற சூழல் மேலும் மோசமடைந்து வருகிறது"
'சுமார் 500 மரண தண்டனையை நேரில் பார்த்துள்ளேன். ஆனால் இதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் பார்த்ததில்லை'
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற சுமார் 500 மரண தண்டனைகளை செய்தியாளராக மைக்கேல் கிராசிக் நேரில் பதிவு செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு அசோசியேட்டட் பிரஸ்ஸில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவர் மரண தண்டனைகள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































