பாகுபலி வசனம்: "தெரியாமல் செய்த செயல்"
பிரசுரிக்கப்பட்டது
இந்த குறிப்பிட்ட வசனத்தை சாதியை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதவில்லை என்கிறார் பாகுபலி திரைப்படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி. அப்படி ஒரு சாதியினர் இருப்பதே தனக்குத் தெரியாது என்னும் மதன் கார்க்கி, பாகுபலி திரைப்படம் தணிக்கைக்கு சென்றபோது ஞானவேல் ராஜா இது குறித்து தன்னிடம் கூறியதாகவும் ஆனால் தான் எழுதியதன் நோக்கம் அதுவல்ல என்பதால் அப்போது அதுகுறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.