புதிய நிர்வாக செயல்திட்டத்தில் பணியாற்ற 2 ஆலோசகர்களை நியமித்தார் டிரம்ப்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விரைவில் அமையவிருக்கும் நிர்வாகத்தின் செயல்திட்டத்தை செயல்படுத்த தனது இரண்டு முக்கிய ஆலோசகர்களை நியமித்துள்ளார்.

புதிய நிர்வாக செயல்திட்டத்தில் பணியாற்ற தனது 2 ஆதரவாளர்களை நியமித்தார் டிரம்ப்

அமையவிருக்கும் புதிய நிர்வாகத்தில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பர்

தற்போது குடியரசுக் கட்சியின் தேசிய குழுவின் தலைவரான ரைன்ஸ் பிரீபஸ், வெள்ளை மாளிகை பணியாளர்களின் புதிய தலைவராக செயல்படுவார்.

ஆனால், யுத்திகள் வகுக்கும் மூலோபாய பிரிவுத் தலைவராக ஸ்டீபன் பேனன் நியமிக்கப்பட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்டீபன் பேனன்
படக்குறிப்பு, ஸ்டீபன் பேனன்

தனது வலதுசாரி கருத்துக்களால் நன்கு அறியப்பட்ட பிரைட்பார்ட் நியூஸ் எனற இணையதள நிறுவனத்தின் தலைவராக பேனன் இருந்து வந்தார்.