ரூபாய் நோட்டு விவகாரம்: நாடளாவிய போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு
இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு எதிராக 13 எதிர்க்கட்சிகள் இணைந்து அடுத்த திங்கட்கிழமை தேசிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

பட மூலாதாரம், AFP
நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த போராட்ட நாள் "கோபத்தின் நாளாக" அடையாளப்படுத்தப்படும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக, ஊழல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவின் உயர் மதிப்பு மிக்க ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், பழைய நோட்டுகளுக்கு பதிலாக போதிய அளவிற்கு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வராததால்,ரொக்கப் பொருளாதாரம் முற்றிலும் நின்றுவிடும் அளவுக்கு வந்திருக்கிறது.
இந்த பிரச்சனை பற்றி பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு இதுதான் மிகவும் சரியான தருணம். ஆனால் அதனை மோதி இதுவரை செய்யவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.




























