தெற்கு ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் நிறுவப்படவில்லை : ஹெல்மண்ட் மாகாண ஆளுநர் மறுப்பு

பிரசுரிக்கப்பட்டது

தெற்கு ஆஃப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில், தங்களுடைய தலைமையின் கீழ் அமைப்பு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது என்ற தாலிபன் அமைப்பின் சமீபத்திய கூற்றை ஹெல்மண்ட் மாகாணத்தின் ஆளுநர் மறுத்துள்ளார்.

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

தாலிபனின் சில ராணுவ தளபதிகளும் மற்றும் மறைமுகமாக செயல்படும் நிர்வாக அங்கத்தினரும் மாகாணத்தில் உள்ளனர் என்றும், ஆனால் தீவிரவாத குழுவின் தலைவர்கள் பாகிஸ்தானில் உள்ள குவேட்டாவில் இருக்கிறார்கள் என்றும் ஆளுநர் ஹயத்துல்லா ஹயத் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சமீப மாதங்களில், ஹெல்மண்டில் தாலிபன் மற்றும் ஆஃப்கன் அரசு படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

மாகாண தலைநகர் லஷ்காகர் உட்பட நகர்ப்புற மையங்களை ஆஃப்கன் அரசு படைகள் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது.