பிரான்ஸ்: மத்திய-வலது சாரி குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக பிரான்சுவா ஃபியோங் தேர்வு

முன்னாள் பிரதமர்களான ஆலாங் யுபேவும் பிரான்சுவா ஃபியோங்கும்
படக்குறிப்பு, முன்னாள் பிரதமரான ஆலாங் யுபேயை (இடது) பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரான்சுவா ஃபியோங் (வலது) தேற்கடித்திருக்கிறார்
பிரசுரிக்கப்பட்டது

அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் பிரான்ஸில் பெரும் மாற்றங்களை கொண்டுவர போவதாக மத்திய-வலது சாரி குடியரசு குடியரசு கட்சியின் புதிய தலைவர் பிரான்சுவா ஃபியோங் தெரிவித்திருக்கிறார்.

மர்ரீன் ல பென்
படக்குறிப்பு, பிரான்ஸின் இந்திய பெருங்கடல் தீவான லா ரியூனியனில் இந்து கோயிலை பார்வையிட்ட மர்ரீன் ல பென்

இன்னொரு முன்னாள் பிரதமரான ஆலாங் யுபேயை பெரும் வாக்கு வித்தியாசத்தில் ஃபியோங் தேற்கடித்திருக்கிறார்.

வால்ஸ் மற்றும் பிரான்சுவா ஒலாந்த்
படக்குறிப்பு, வால்ஸ் (வலது) அதிபர் பிரான்சுவா ஒலாந்த்-துக்கு (வலது) எதிராக போட்டியிடுவாரா?

ஆரவாரித்த ஆதரவார்களின் கூட்டத்தில் பேசிய ஃபியோங், நாட்டின் செயல்பாட்டு மனோபாவத்தை முழுமையாக மாற்றி, மறுபடியும் செயல்பட தொடங்குவது அவசியமாகிறது என்று தெரிவித்தார். தையை தளர்த்துவது உள்பட இறுக்கமற்ற பொருளாதார திட்டங்களோடு அதிபர் வேட்பாளர் நியமனத்தை பெற்றிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் இம்மானுவேல் மக்ரான்
படக்குறிப்பு, சுயேட்சை வேட்பாளர் நிற்கும் அதிபர் பிரான்சுவாவின் முன்னாள் அமைச்சர் இம்மானுவேல் மக்ரான்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில், , இன்னும் கட்சியின் நியமனம் பெறவிருக்கின்ற சோஷலிஸ்ட் வேட்பாளர் மற்றும், தீவிர வலது சாரி அதிபர் வேட்பாளர் மர்ரீன் ல பென்னுடன், நடைபெறும் போட்டியில் பிரான்சுவா ஃபியோங் மோதவிருக்கிறார்.