பழம்பெரும் சிரியா நகரான பல்மைராவை மீண்டும் கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள்
பிரசுரிக்கப்பட்டது
ஐ.எஸ் தீவிரவாதிகள் பழம்பெரும் சிரியா நகரான பல்மைராவை மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஒரே இரவில் ரஷ்யா நடத்திய கடும் வான்வழித்தாக்குதலில் அவர்கள் விரட்டப்பட்டதை தொடர்ந்து இந்நகரை மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.
ஹோம்ஸ் மாகாணத்தின் ஆளுநர் டலால் பராஸி, அரசு படைகள் அந்நகரிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐ.எஸ் தீவிரவாதிகளை மீண்டும் விரட்டும் நோக்கில் படையினர் குழுக்களாக ஒன்றிணைத்து வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமையன்று, ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்மைராவை கைப்பற்றினர்.
மேலும் வடக்கே, அலெப்போவிற்குள் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் சிரியா அரசாங்க படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகள் நடத்திவரும் கடுமையான தாக்குதலை எதிர்கொள்ள பயந்து 10 ஆயிரம் பொதுமக்கள் தப்பியோடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.




























