தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் - டிரம்ப் சூசகம்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டினால் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தான் நீக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப்
படக்குறிப்பு, தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத "ஒரே சீனா" என்ற கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் - டிரம்ப்

தீவிரவாதத்தை எதிர்க்கவும், பிற முக்கிய குறிக்கோள்களை அடையவும் அமெரிக்காவுக்கு ரஷ்யா உதவினால் இந்த தடை நடவடிக்கைள் இல்லாமல் போகலாம் என்று வால் ஸ்டீட் பத்திரிகையிடம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் கூறியிருக்கிறார்.

இணையத் தாக்குதல்களை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டிய பின்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

விளாடிமிர் புதின் மற்றம் பராக் ஒபாமா
படக்குறிப்பு, அமெரிக்காவுக்கு உதவினால், தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் - டிரம்ப் சூசகம்

தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத "ஒரே சீனா" என்ற கொள்கை பற்றியும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா தனது நாணயத்தை சர்வதேச சந்தையில், சந்தை நிலவரத்துக்கேற்ப மதிப்பு மாறும் முறையை அனுமதித்து அமெரிக்க நிறுவனங்களை போட்டியிட சீனா அனுமதிக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தான் பதவியேற்றவுடன் நாணய மதிப்பை கட்டுப்படுத்தும் நாடு என்று சீனாவை முத்திரை குத்தப்போவதில்லை என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை (காணொளி)

காணொளிக் குறிப்பு, இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்