தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு - மெர்கல்
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Adam Berry/Getty Images
செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவில் தற்காப்புவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்வி ஒன்றிக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்திருத்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடியின் போது, ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கைகளை அதற்கு சான்றாக மெர்கல் சுட்டிக்காட்டினார்.
டிரான்ஸ் பசிபிக் வர்த்தக உடன்பாட்டுக்கு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொன்ல்ட் டிரம்ப் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றிய தன்னுடைய அதிருப்தியை மெர்கல் முன்னதாக வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்
































