வயலின் வாசித்தபடி விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
தங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காஃப்ஸ் ஹார்பர் நகரில் இப்படி ஒரு சாகசத்தை அரங்கேற்றியுள்ளார் வயலின் இசைக்கலைஞர் டோனலி.
ஆஸ்திரேலிய வயலின் இசைக்கலைஞரான கிளென் டோனலி தன்னுடைய 30-வது பிறந்தநாளின்போது தனக்குத் தானே சவாலான ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு இதனை நிறைவேற்றியுள்ளார்.
பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து குதித்த பின்னர், தரையை நோக்கி வருகின்றபோது, வயலினில் இரண்டு இசைகளை இசைத்துக்கொண்டே தரையிறங்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்