பிபிசி தமிழில் இன்று...மாலை 6 மணி வரை

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

aiadmk

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள் கிழமையன்று நடந்த கூட்டத்தில் 77 சட்டமன்ற உறுப்பினர்களே கலந்துகொண்டார்கள் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

line break
ஜகத் ஜெயசூர்ய

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்கா நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

line break
வட கொரியா

ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.

line break
பெரியவரைப் பற்றிக்கொண்டுள்ள குழந்தையின் கைகள்

ஒரு இஸ்லாமியக் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த ஒரு ஐந்து வயது இஸ்லாமியப் பெண் குழந்தை அவள் பிறந்த குடும்ப உறுப்பினர் ஒருவராலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

line break
narinder nanu

மத்திய அரசு திட்டங்களின் பலன்களைப் பெற அவற்றுடன் ஆதார் எண்ணை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிர்ணயித்திருந்த காலக்கெடு வரும் டிசம்பர் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

line break
பிரிவினை

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.

line break
காணொளிக் குறிப்பு, விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து வயலின் வாசித்தபடி தரையிறங்கிய இசைக் கலைஞர்

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.

line break
இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள்

தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

line break

டெல்லியில் தொடர்ந்து 46-ஆவது நாளாக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். (காணொளி)

காணொளிக் குறிப்பு, டெல்லியில் தமிழக விவசாயிகள் 46-வது நாளாக போராட்டம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :