பிபிசி தமிழில் இன்று... 2 மணி வரை

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

மியான்மர்

மியான்மர் நாட்டின் ரகைன் மாகாணத்தில் சிறுபான்மையினராக விளங்கும் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் ஏற்பட்டுள்ள மனிதநேய நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசின் தலைவராக செயல்முறையில் இருக்கும் ஆங் சான் சூ சி, அம்மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

line break
கௌரி லிங்கேஷ்

வலதுசாரிகள் மற்றும் வகுப்புவாதத்தைத் தீவிரமாக விமர்சித்து வந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூரில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

line break
காஜி

ஜெய்ப்பூரில், முஸ்லிம் பெண்களுக்கு திருமணம், முத்தலாக், ஹலாலா, கணவரால் வீட்டை விட்டு பெண்கள் வெளியேற்றப்படுதல் என பலவிதமான குடும்ப பிரச்சனைகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர் காஜிக்களான ஜாஹனாராவும், அஃப்ரோஜும். ஆனால், காஜி பயிற்சி பெற்ற இந்தப் பெண்களிடம் திருமணம் செய்துகொள்ள யாரும் முன்வரவில்லை என்பது இவர்களது மனக்குறை.

line break
துருக்கி

அந்தச் செய்தியைக் கேட்டதும், தன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த ஆர்தர் மகோமாதேவுக்கு உலகமே இடிந்து விழுவதுபோல இருந்தது. அவரைப் பார்க்க வந்த அவரது மனைவியின் மாமா மற்றும் சகோதரர், அவர் மனைவி அவர்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டதாகக் கூறினார்கள்.

line break
இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அமெரிக்காவிலுள்ள ஹில்ஸ்பரோ என்ற பகுதியிலுள்ள தனது மருமகளை 'அறிவுறுத்த மற்றும் ஒழுங்குபடுத்த' 67 வயதான ஐஸ்பிர் கல்சி மற்றும் 62 வயதான பூபிந்தர் தம்பதியினர் 13 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ததாக ஃபுளோரிடா காவல்துறை தெரிவித்துள்ளது.

line break
இலங்கை

இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யலாம் என்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ள கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :