பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை
பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றமும், மோசமான நகர்புறத் திட்டமிடலும் இயற்கை சீற்றங்களின்போது மக்களின் வாழ்வில் எப்படிப்பட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை விவரிக்கும் பிபிசியின் சிறப்புக் கட்டுரை.
செய்தியை படிக்க: சென்னை முதல் ஹ்யூஸ்டன் வரை: வெள்ளத்திற்கு யார் பொறுப்பு?


"நீட்" விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான போராட்டங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமானால் அவற்றை மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செய்தியை படிக்க: "நீட்" போராட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை


பட மூலாதாரம், EPA
மெக்சிகோ நாட்டின் தெற்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டிலேயே மிகவும் வலிமையான நிலநடுக்கம் என்று அதை அந்நாட்டு அதிபர் விவரித்துள்ளார்.
செய்தியை படிக்க: மெக்சிகோவை உலுக்கிய 8.2 நிலநடுக்கம்: பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை


பட மூலாதாரம், Alex Wong/Getty Images
கத்தாருக்கும், அதற்கு அருகிலுள்ள அரேபிய நாடுகள் சிலவற்றிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சிக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
செய்தியை படிக்க: கத்தார் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப்


பட மூலாதாரம், Reuters
உலக சமூகமும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூ சியும் இந்த மனித உரிமைச் சிக்கல் பற்றி பேசவேண்டும் என்கிறார் நோபல் பரிசு பெற்ற இளம்பெண் மலாலா.
செய்தியை படிக்க: ரோஹிஞ்சா பிரச்சனையில் உலக சமூகம் தலையிடவேண்டும்: மலாலா


பட மூலாதாரம், Yaniv Berman
`சில விஷயங்கள் குறித்து தனது படத்தில் கூற விரும்பியதாகவும், அதனை தற்போது சாதித்துவிட்டதாகவும் ` பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 35 வயதான மேசலூன் ஹமவுட் என்ற பெண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
செய்தியை படிக்க: தனது முதல் திரைப்படத்துக்காக `பத்வா` விதிக்கப்பட்ட பெண் இயக்குநர்..!


பட மூலாதாரம், Manoj Dhaka
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய சாமியார் குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு சொந்தமான, விசித்திர கதையில் வருவது போன்ற பெரிய எஸ்டேட்டின் உள்ளே காணப்படுபவை பற்றிய புகைப்படத் தொகுப்பு.
புகைப்படங்களை பார்க்க : ஹரியானா சாமியாரின் ஆடம்பரத் தலைமையகத்தின் உள்ளே... (புகைப்படத் தொகுப்பு)

கரீபியன் தீவுகளை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ள இர்மா சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர். (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

































