நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவது எதற்காக? (காணொளி)
ஆமை வகைகளிலேயே மிக அழகானவை என அறியப்படுவது நட்சத்திர ஆமைகள்.
உணவு, மருந்து தயாரிப்புக்காக கடத்தப்படும் இந்த ஆமைகள், வீட்டில் செல்லப் பிராணிகளாகவும் வளர்க்கப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் இவை நல்ல விலை போவதால், இந்தியாவில் இவற்றின் கடத்தல் வணிகம் அதிகரித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியில் கடத்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 2,500 நட்சத்திர ஆமைகள் சமீபத்தில் மீட்கப்பட்டன.
பிடிபட்ட ஆமைகள் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டன.
உயிரியல் பூங்காவின் மருத்துவர்கள் அந்த ஆமைகளை பராமரித்து வருகின்றனர்.
ஆமைகளின் உணவு விவகாரத்தில் அக்கறை செலுத்தப்படுவதாக மருத்துவக் குழுவினர் குறிப்பிட்டனர்.
இந்த ஆமைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், இவை ஒரே இடத்தில் இனப்பெருக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச அளவில் கடத்தப்படக்கூடிய, அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும் இந்த ஆமைகள் இடம்பெற்றுள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்