பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை ...
பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Reuters
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவின் நிலைக் குழுவுக்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தார் அதிபர் ஷி ஜின்பிங்.


பட மூலாதாரம், Getty Images
கொரியர் அஞ்சல் கொண்டுவந்தவருக்கு டிப்ஸ் கொடுக்க காசில்லாமல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் எழுதிக் கொடுத்த இரண்டு குறிப்புகள் 17.4 லட்சம் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது.


இசக்கிமுத்துவின் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் திங்கள்கிழமை இறந்துவிட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிக்சை பிரிவில் இருந்த இசக்கிமுத்து இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியை படிக்க: கந்துவட்டி தொல்லை: தீக்குளித்த நான்காவது நபரும் பலி


"ஒர் ஆணை எது அழகாக்குகிறது?" என் பெண் தோழிகளுடன் ஒரு குளிர்கால மாலையில் தேனீர் அருந்த அமர்ந்தபோது எங்களுக்குள் விவாதமாக எழுந்த கேள்வி இது.
செய்தியை படிக்க: யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?


பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய "2ஜி" எனப்படும் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மியான்மரில் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது ராணுவ உதவிக் குழுக்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா.
செய்தியை படிக்க: மியான்மருக்கான ராணுவ உதவியை விலக்கிக்கொள்கிறது அமெரிக்கா


பட மூலாதாரம், AJAY
கழிவறை இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தீர்ப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பாஹ்பத்தின் பிஜ்வாடா கிராம பஞ்சாயத்து, முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எந்த வீட்டில் கழிவறை இல்லையோ, அங்கு திருமணம் நடக்காது என்பதே அந்த தீர்மானம்.
செய்தியை படிக்க: கழிவறை இல்லாத வீட்டில் கெட்டிமேளம் கிடையாது

உலக பொழுதுபோக்கு மல்யுத்த போட்டியில் போட்டியிட உள்ள முதல் இந்திய பெண் கவிதா தேவி. குடும்ப வரம்புகளை உடைத்து தனது கனவுக்காக பல போராட்டங்களை நடத்திவரும் கவிதாவை பற்றிய காணொளி.

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை தனது ஆட்டோவில், தகவல் தொழில்நுட்பத்தைப் புகுத்தி பயணிகளுக்கு வசதிகளைத் எவ்வாறு தருகிறார் என்பதை பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் ஜெயக்குமார் பதிவு செய்துள்ளார். (காணொளி)

சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது அரசியலமைப்பில் 'ஷி ஜின்பிங் கோட்பாடு' என்ற ஒன்றை இணைத்துள்ளது. இது, மா சே-துங்கின் நிலைக்கு ஷி ஜின்பிங்கை உயர்த்தியுள்ளது. 'ஷி ஜின்பிங் கோட்பாடு' என்பது என்ன என்பதை விளக்கும் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



































