கென்ய அதிபர் மறுதேர்தல்: எதிர்க்கட்சி புறக்கணிப்பால் போராட்டம்
மறுபடியும் நடத்தப்படுவது தொடர்பான சர்ச்சையிலுள்ள கென்ய அதிபர் தேர்தல், ஏற்கொனவே திட்டமிட்டதைபோல வியாழக்கிழமை நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையத்தின் தலைவர் வாஃபுலா செபுகாட்டி அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து உறுதிகளை பெற்ற பின்னர், வாக்கெடுப்பு உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கும் என்று வாஃபுலா செபுகாட்டி தெரிவித்திருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவரான ராய்லா ஒடிங்கா இந்த தேர்தலை புறக்கணித்துள்ளார்.
இந்த தேர்தலின் நம்பகத்தன்மை பற்றிய கவலைகள் இருந்தாலும், இது நடைபெற வேண்டும் என்று கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா கூறியுள்ளார்.
முன்னதாக, சிறப்பு விசாரணை அமர்வுக்கு ஏழு நீதிபதிகளில் இருவரே வந்ததால், இந்த வாக்கெடுப்பை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தால் முடியவில்லை.

பட மூலாதாரம், AFP
இந்நிலையில், உச்ச நிதிமன்றத்திற்கு நீதிபதிகள் வராமல் இருந்தது மிரட்டுவதற்கு சான்றாக இருக்கிறது என்று கென்ய எதிர்க்கட்சியின் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துவது சட்டப்பூர்வமற்றதாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் கூடுவதற்கு தோல்வியடைந்ததை அடுத்து, வட பகுதியிலுள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கண்ணீர் புகை வீசும் காவல் துறைக்கும், கல்வீசும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவதாக கிசுமு நகரில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































