பிபிசி தமிழில் இன்று....

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

கார்லஸ் பூஜ்டிமோன்
படக்குறிப்பு, கார்லஸ் பூஜ்டிமோன்

பிராந்திய நாடாளுமன்றம்தான் இதுகுறித்து முடிவெடுக்கும் என்று கேட்டலன் தலைவரான கார்லஸ் பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

Presentational grey line
அப்துல் கரீம் தெல்கி
படக்குறிப்பு, அப்துல் கரீம் தெல்கி

2001-இல் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் வைத்து கைது செய்யப்பட்ட தெல்கியிடம் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி முத்திரைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Presentational grey line
இவர்தான் ஆதிகால சுனாமியால் பலியான முதல் நபரா? விஞ்ஞானிகள் ஆய்வு

பப்புவா நியு கினியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித மண்டையோடு, இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபர் என அடையாளம் காணப்பட்டவரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line
மெர்சல் பட வெற்றிக்கு 'ஜோசப்' விஜய் நன்றி

"இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் இலவசம். அதைச் சுட்டிக்காட்டினேன். சாராயத்திற்கு வரி இல்லை என்கிறார். அது தவறு என்று சுட்டிக்காட்டினேன். இதில் என்ன தவறு?"

Presentational grey line
இந்தியாவில் 152 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்தியோசாரின் படிமங்கள் கண்டெடுப்பு

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் 152 மில்லியண் ஆண்டுகள் பழமையான அழிந்து போன கடல் ஊர்வன இக்தியோசாரின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர்.

Presentational grey line
சீனாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாத தகவல்கள்

சீனாவும், ஷி ஜின்பிங்கின் பெயரும் உலகில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டுவரும் நிலையில் சீனாவைப் பற்றிய 13 விடயங்களை உங்களுக்கு சொல்கிறோம், இவை அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, 93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்

பிரேசிலை சேர்ந்த 93 வயதாகும் நோரா ரோநாய் என்னும் இப்பெண், தனது வாழ்க்கையில் பாலின பாகுபாட்டை எதிர்கொண்டதாகவும், ஆனால் அது தனது இலக்குகளை அடைவதில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செயல்பட்டதாகவும் கூறுகிறார். (காணொளி)

Presentational grey line
பாரிஸைவிட பணக்கார நகரம் டெல்லி

பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் முகலாயர்கள் தொடர்பான அடையாளங்கள் பற்றி பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளனர். அதில் தலையை உயர்த்திப் பார்க்க வைக்கும் தாஜ்மஹால் தொடங்கி, குனிந்து பூமியைப் பார்க்கச் செய்யும் சாலைகளின் பெயர்களும் அடங்கும்.

Presentational grey line
பட்டாசுத் தொழிற்சாலை விபத்து.

இந்தோனீசியாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, கடல் நீரில் மூழ்கும் முன் தப்பிக்க முயலும் பனாமா தீவு

பனாமாவின் தீவுகளில் ஒன்றான கார்ட்டி சுக்டப்பில் வசிக்கும் மக்கள் அங்கு அதிகரித்து வரும் கடல்நீர் மட்டம் மற்றும் தொடர்ந்து மாறி வரும் வானிலையால் அச்சமடைந்துள்ளனர். (காணொளி)

Presentational grey line
காணொளிக் குறிப்பு, மறைந்த மன்னருக்கு மாபெரும் அஞ்சலி

ஓராண்டுக்கு முன்பு இறந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜின், ஐந்து நாள் இறுதிசடங்கு புதன்கிழமை தொடங்கியது. தாய்லாந்து மன்னர், 2016ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், தனது 88 வயதில் இயற்கை எய்தினார். மன்னரின் உடலுக்கு, அவரின் மகனும், அடுத்த மன்னருமான மகா வஜ்ரலாங்கோர்ன் எரியூட்டவுள்ளார்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, குரலுக்காக கொல்லப்படும் ஜாவா குயிலினங்கள்

இந்தோனேஷியாவின் ஜாவாவிலுள்ள பாடும் பறவைகளை வனவிலங்குச் சந்தையில் பலரும் வாங்குவதால் அவை அழிவின் விளிம்பில் உள்ளன.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்