ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

லூயிஸ் ஹாமில்டன்

கிராண்ட் பிரிக்ஸ் கார் போட்டிகளில் தனது நான்காவது பட்டத்தை வென்றுள்ளார், இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன். இதன்மூலம், அவர் சக நாட்டு வீரரான சர் ஜாக்கீ ஸ்டூவர்ட்டின் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல், ஜெர்மனியின் வீர்ரான சபாஸ்டீன் விட்டலின் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

Presentational grey line
சோமாலியா தாக்குதல்

சோமாலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலின் போது, மூன்று கிளர்ச்சியாளர்களை பிடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருவேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். இதன் காரணமாக, பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் இருவரின் வேலையும் பறிக்கப்பட்டுள்ளது.

Presentational grey line
அரங்கில் இஸ்லாமிய பெண்கள்

2018 ஆண்டு முதல், பெண்களை விளையாட்டு அரங்கிற்குள் பார்வையாளர்களாக அனுமதிக்க உள்ளது சௌதி அரேபியா என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்த இந்த அரங்கங்களை, குடும்பங்களாக வருவதற்கு ஏற்ற இடமாக மாற்றும் ஏற்பாடுகளை செய்து வருவதாக, சௌதி அரேபியாவின் விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

Presentational grey line

2011 இல் எடுக்கப்பட்ட எம்.ஐ 8ரக ஹெலிகாப்டரின் படம்

காணாமல் போன, ரஷிய ஹெலிகாப்டர், ஸ்வால்பார் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்று விஞ்ஞானிகள் மற்றும் ஐந்து ஹெலிகாப்டர் குழுவினருடன், பிரமீடனில் இருந்து பாரன்ஸ்பர்ட்கிற்கு சென்றுகொண்டு இருந்த போது, இந்த ஹெலிகாப்டர் வியாழக்கிழமை மாயமானது.

Presentational grey line
மியான்மர் நாடாளுமன்றம்

மியான்மர் நாடாளுமன்ற வளாகத்தின் அருகில் சட்டவிரோதமான முறையில், டிரோன் விமானங்களை பறக்கவிட்டதற்காக இரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களையும், இரு பர்மா நாட்டினரையும், மியான்மர் அரசு கைது செய்துள்ளது. இவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :