பிபிசி தமிழில். . . மதியம் 1 மணி வரை. . .

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

சௌதி அரேபிய பெண்கள்

2018-ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Presentational grey line
ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல்

ரஷ்ய மன்னரின் வெண்சேனை, கிட்டத்தட்ட ஐநூறு டன் தங்கத்தை ஒரு ரயிலில் ஏற்றி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கிழக்கு பகுதியில் உள்ள கஜான் நகருக்கு அனுப்பின.

Presentational grey line
கமலஹாசன்

சென்னை எண்ணூர் துறைமுகத்தின் கழிமுக பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்ட நிலையில், ஆதாரமின்றி பீதியை கிளப்பினால் கமல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருந்தார்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, ஆட்டிசம் பாதிப்பை குறைக்க யோகப் பயிற்சி அளிக்கும் லண்டன் சிறப்பு பள்ளி

லண்டனிலுள்ள ஒரு சிறப்பு கல்வி அளிக்கும் பள்ளியில், ஒவ்வொரு வாரமும் ஆட்டிசம் குழந்தைகளுக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மிகவும் வெற்றியடைந்துள்ளதால், இந்தப் பள்ளி அதனுடைய ஆசிரியர்களை யோகா ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பியுள்ளது.

Presentational grey line
துணை அமைச்சர் விஜயசேகர பதவி

இலங்கையில் மற்றுமொரு துணை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Presentational grey line
தென் ஆப்பிரிக்கா வீரர்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

Presentational grey line
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மதுபானம் 25% தள்ளுபடி!

இஸ்ரேலில் உள்ள பார் ஒன்று மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அருந்தும் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :