பிபிசி தமிழில் 1 மணி வரை இன்று

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலின் உட்புறம்

அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் முக்கிய நபர்கள் உயர்வகுப்பு சங்கிலி ஹோட்டல்களான ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் தங்குவார்கள். பணக்காரர்களின் இரண்டாவது வீடு போல இந்த ஹோட்டல்கள் இருக்கிறது.

Presentational grey line
ஏமனில் பேரழிவு நிலை

உயிர் காக்கும் உதவிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உயிர்களின் நிலை பேரழிவு நிலைமையில் இருப்பதாக ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Presentational grey line
பாரிஸ் ஒப்பந்தம்

ஜூன் மாதம், ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கிக்கொள்வதாக தெரிவித்த அமெரிக்கா, ஒப்பந்தத்தில் உள்ள விதிகள் 2020வரை அவ்வாறு செய்ய முடியாது என கூறுவதால் விலக முடியவில்லை என்று கூறியது.

Presentational grey line
சியா ஃபர்லர்

தனக்கு என்னென்ன பிடிக்கும் உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தாமல் தனது வாழ்க்கையை ரகசியமானதாக வைத்திருப்பதற்காக அவர் அறியப்பட்டவர்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, இந்தியாவில் அதிகபட்ச உயிரிழப்பை ஏற்படுத்தும் மின்னலின் வடிவத்திற்கான காரணமென்ன? (காணொளி)

பிளக்கும் மின்னலுக்கு குறிப்பிட்ட வடிவமுள்ளது என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால், அதற்கான காரணமென்ன என்ற கேள்விக்கான விடையை அளிக்கிறது இந்த காணொளி.

Presentational grey line
ஜெர்சிக்கு இடம்பெயர்ந்த ஆப்பிள் நிறுவனம்

வரிச்சலுகைக்காக தீவிரமாக இயங்கி வந்ததால் சர்ச்சைக்குரிய அயர்லாந்து நாட்டு வரிவிதிப்பு நடைமுறைகள் தொடர்பாக 2013-இல் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆப்பிள் நிறுவனம் எவ்வாறு தவிர்த்தது என்பதை இந்த ஆவணங்கள் வெளிக்காட்டியுள்ளன.

Presentational grey line
"பண மதிப்பிழப்பு

இந்த அறிவிப்பின் மூலம் இந்தத் தலைமுறை, "பண மதிப்பிழப்பு" என்ற ஒரு புதிய சொல்லாடலை முதல் முதலில் கேட்கிறது. இந்தக் கொள்கை முடிவு நடைமுறைக்கு வந்து இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது.

Presentational grey line
குரங்குகள் தேர்தலின் முடிவை மாற்றுமா?

மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் குரங்குகளின் பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, demonetization

இந்திய அரசு 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கி நடவடிக்கை எடுத்து, இன்றுடன் (நவம்பர் 8) ஓராண்டாகிறது. இந்நிலையில் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெற்றதும், இழந்ததும் என்ன?

Presentational grey line
கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு அரசியல் குறித்த அபிலாஷைகள் இருப்பது தெரிய ஆரம்பித்தவுடன், அ.தி.மு.கவும் பாரதீய ஜனதாக் கட்சியும்தான் அதனைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தன.

Presentational grey line
வாதம் விவாதம்

''அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வருவது சந்தேகமே ,இந்த நிலையில் திமுக தேவை பாஜகவுக்கு தேவையாக இருக்கலாம்'' என ஆறுமுகம் கூறியுள்ளார்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :