பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை
பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண்கள்

"ஐந்து முறை தொழுது, குடும்பத்துடன் உணவு உண்ணக் கூடிய வாழ்க்கை எனக்கு மீண்டும் வேண்டும். மியான்மரில் நான் வாழ்ந்த வாழ்க்கையை நான் மீண்டும் வாழ வேண்டும்", என்கிறார் ஹலீமா.
செய்தியை படிக்க:வங்கதேசம்: பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

திட்டப்பணிகளை ஆய்வுசெய்த ஆளுநர்

மாநில ஆளுநர் இம்மாதிரி கூட்டத்தில் பங்கேற்பதை அறிந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆளுநரைச் சந்திக்க வந்தார்.
செய்தியை படிக்க: அரசு அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் கூட்டம் நடத்தியதால் சர்ச்சை

ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில் பலி

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் டஜன் கணக்காணோர் இறந்துள்ளனர்.
செய்தியை படிக்க: ஆப்கன் சோதனைச் சாவடி மீது தாலிபன் தாக்குதல்: டஜன் கணக்கில் பலி

பிச்சைக்காரர்களை அடையாளம் காட்டினால் 500 ரூபாய் சன்மானம்

பட மூலாதாரம், TS SUDHIR
அமெரிக்க அதிபரின் மகள் இவான்கா டிரம்பின் வருகையையடுத்தே இது செயல்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறினாலும், அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.
செய்தியை படிக்க: ஐதராபாத்: பிச்சைக்காரர்களை அடையாளம் காட்டினால் 500 ரூபாய் சன்மானம்!

பிளாஸ்டிக்பாட்டில்படகு
பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் உருவாக்கப்பட்ட படகுகள், கேமரூனின் சுற்றுச்சூழலை பாதுக்காக்க உதவுமா? இந்த வித்தியாசமான படகை இஸ்மெயில் எஸோமே என்பவர் வடிவமைத்துள்ளார். பிளாஸ்டிக்கால் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு இது ஒரு தீர்வைத் தரும் என்று அவர் நம்புகிறார்.

இராக்-இரான் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)
இராக்-இரான் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்தன. பெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவதை இதில் காணலாம்.

இலங்கை: உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் அதிகரிப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட்டாரம் மற்றும் விகிதாசாரம் கொண்ட கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 சத வீதத்தால் அதிகரித்துள்ளது.

குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைக் காரணம் காட்டி, பள்ளிக்கூடத்திற்கு ஒருநாள் கூட ஆகாஷ் விடுப்பு எடுக்கவில்லை என்றும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுப்பதிலும் தவறவில்லை என்றும் ஆனந்தன் கூறினார்.
செய்தியை படிக்க: குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் 8 வயது சிறுவன்

'குழந்தைகள் நலன் கருவிலிருந்தே துவங்க வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் வந்த பன்னாட்டு அமைப்பின் ஆய்வுகளின்படி, உலக அளவில் சத்தற்ற குழந்தைகள் வாழும் ஆப்பிரிக்க நாட்டைப் பின்தள்ளி, இந்தியா முதல் ஐந்து இடங்களுக்குள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
செய்தியை படிக்க: 'குழந்தைகள் நலன் கருவிலிருந்தே துவங்க வேண்டும்'

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதா?

ராமஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், கடலோரக் காவல்படை அதனை மறுக்கிறது.

'திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

பட மூலாதாரம், AFP
அக்டோபரில், டோக்கியோவின் புறநகர் பகுதிகளில் உள்ள "திகில் வீடு" என்று கூறப்படும் ஒரு வீட்டில் குளிர்சாதன பெட்டிகளில் ஒன்பது சிதைந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
செய்தியை படிக்க: 'திகில் வீடு': வலைதளங்களை பயன்படுத்தி தொடர் கொலைகள்!

'லட்சுமி' குறும்படம் மீதான கடும் விமர்சனங்கள் - குறுகிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடா?


புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
ஹார்ட் அட்டாக் அல்லது இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று பிரிட்டிஷ் இதய அறக்கட்டளை வலியுறுத்துகிறது.
செய்தியை படிக்க: புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா?

இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி

பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/Getty Images
குஜராத் வித்யாபீடத்தின் சமூகவியல் துறை தலைவரான ஆனந்திபென் பட்டேல், பெண்கள் அரசியலில் நுழைவதற்கு இருக்கக்கூடிய தடைக்கற்களாக இத்தகைய சம்பவங்கள் உள்ளது என்று நம்புவதாகக் கூறினார்.
செய்தியை படிக்க: இது அவ்வளவு முக்கிய பிரச்சனையா? - செக்ஸ் குற்றச்சாட்டு குறித்து குஜராத்தி பெண்கள் கேள்வி

''மலையளவு துக்கம் வந்தாலும், நேரு குடும்பத்தினர் கண்ணீர் விடுவதில்லை"

பட மூலாதாரம், Getty Images
நேருவின் கோபமே அவரது உயிருக்கு உலைவைக்கும் என்ற பயம் மவுண்ட்பேட்டனுக்கு எப்போதுமே இருந்தது. எனவே நேருவை கண்காணிப்பதற்காக அவர் சில வீரர்களை நியமித்திருந்தார்.

விநோதினி முதல் இந்துஜா வரை

பட மூலாதாரம், Science Photo Library
விநோதனி மீது அமிலம் வீசப்பட்டது 2012-ம் ஆண்டு, நவம்பர் 14-ம் தேதி. சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து அதே நாளில், இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


































