ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
டா வின்சியின் ஏசுநாதர் ஓவியம் 450 மில்லியன் டாலருக்கு ஏலம்

பட மூலாதாரம், CHRISTIE'S
நியூ யார்க் நகரில் நடைபெற்ற ஏலம் ஒன்றில், லியனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட ஓவியம் என்று நம்பப்படும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏசுநாதரின் ஓவியம் ஒன்று சுமார் 450 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேவில் ஆட்சிக்கவிழ்ப்பு: ஆஃப்ரிக்க யூனியன்

பட மூலாதாரம், Getty Images
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை என்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய கிரீஸில் வெள்ளப் பெருக்கு: 15 பேர் பலி

பட மூலாதாரம், EPA
நள்ளிரவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மத்திய கிரீஸில் குறைந்தது 15 கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அங்கு கடும் சேதங்களை வெள்ளப் பெருக்கு உண்டாக்கியுள்ளது.

ஃபிரான்ஸுக்கு வர லெபனான் பிரதமருக்கு மக்ரோங் அழைப்பு

பட மூலாதாரம், Getty Images
லெபனான் பிரதமர் சாத் ஹரிரி மற்றும் அவரது குடும்பத்தினரை ஃபிரான்ஸுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோங் அழைப்புவிடுத்துள்ளார். ஆனால், தான் அரசியல் தஞ்சம் வழங்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images
ஒரு மிதமான வானிலையுடன் வாழக்கூடிய சூழ்நிலையில் பூமியின் அளவுக்கு ஒரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பெயர் 128பி. பூமியிலிருந்து சுமார் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் 128பி கிரகம் அமைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
































