பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை
பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
70 கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பறை இல்லை

பட மூலாதாரம், PRAKASH SINGH/AFP/GETTY IMAGES
உலக கழிவறை தினத்தில், வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே இந்தியாவில் தான், அடிப்படை சுகாதாரத்திற்காக கழிவறைகளை பயன்படுத்தும் வசதி இல்லாத அதிகம் மக்கள் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
செய்தியை படிக்க: 70 கோடி இந்தியர்களுக்கு சரியான கழிப்பறை இல்லை

பவரியா கொள்ளையர்கள்:

பட மூலாதாரம், MOVIE POSTER
2005ல் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைதுசெய்தனர். சமீபத்தில் வெளியான தீரன் திரைப்படத்தின் கதை இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது.
செய்தியை படிக்க: பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி?

சீனா: குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

பட மூலாதாரம், Reuters
14 தீயணைப்புக்குழுவில் உள்ள முப்பதிற்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மூன்று மணிநேரத்திற்கும் மேல் போராடி, தீயை அணைத்தனர்.
செய்தியை படிக்க: சீனா: தீ விபத்தில் 19 பேர் பலி

சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES
இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவால், சிரியாவில் கைப்பற்றப்பட்டிருந்த கடைசி புறநகர் பகுதியான அல்பு கமலை, சிரிய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியை படிக்க: சிரியா: அல்பு கமல் பகுதியை கைப்பற்றியது ராணுவம்

அழகிப் போட்டியில் அரசியல்:

பட மூலாதாரம், Instagram
சமீபத்தில் நடைபெற்ற 'ரீனா ஹிஸ்பேனோஅமெரிக்கானா 2017' எனும் தென் அமெரிக்க அழகிப் போட்டியில், சிலியைச் சேர்ந்த வாலண்டினா ஷ்னிட்ஸர், அந்தக் கடல் பரப்பு பொலியாவுக்கே சொந்தமானது என்று கூறியதுடன் சிலி மக்களும் அவ்வாறே நினைக்கிறார்கள் என்று கூறினார்.
செய்தியை படிக்க: அழகிப் போட்டியில் அரசியல் பேசினால் என்ன ஆகும்?

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல்:

பட மூலாதாரம், EPA
மூன்று நாட்களாக தொடர்பாடலை இழந்துவிட்ட 44 ஊழியர்களை கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியை அர்ஜென்டினா கடற்படை தென் அட்லாண்டிக்கில் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது சிக்னல் கிடைத்துள்ளதாகவும், அது காணாமல் போன கப்பலில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக் பதிவு செய்த மாயம்:

வீடில்லாமல் வீதியில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு ஏதாவது நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென ஒருவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு பின்னர், வீதியில் வாழ்ந்து வந்த அவருக்கு தங்குவதற்கு இடமும், வேலையும் கிடைத்துள்ளது.
செய்தியை படிக்க: வீடில்லா மனிதருக்கு வீடும், வேலையும் வழங்கிய ஃபேஸ்புக் பதிவு

நீலச் சுறாக்கள் வேகமும் மனிதர்களும்:
ஆழ்கடலில் சுறா மீன்களின் வேகத்துக்கு இணையாக உங்களால் நீந்த முடியுமா? பல ஆண்டுகளாக அதற்காக முயற்சி செய்கிறார் ஒரு பெண்.
செய்தியை படிக்க: நீலச் சுறாக்கள் வேகத்தில் உங்களால் நீந்த முடியுமா? (காணொளி)

ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்:

பட மூலாதாரம், Reuters
எங்களுடைய வீடுகள் எரிந்து கொண்டிருந்த நிலையில், எங்கள் மீது தண்ணீரை தெளிப்பதுபோல, துப்பாக்கியால், குண்டுகளால் சுட்டனர்
செய்தியை படிக்க: வங்கதேசத்திற்கு தப்பி சென்ற ரோஹிஞ்சாக்களின் காயங்களும், வடுக்களும்

ஜிம்பாப்வே: புதிய தலைவரை நியமித்தது ராணுவம்:

பட மூலாதாரம், Getty Images
37 ஆண்டுகளாக ஜிம்பாப்வேவின் தலைவராக இருந்த முகாபேவை நீக்கிய ராணுவம், அந்நாட்டின் புதிய தலைவரை இன்று நியமித்தது.
செய்தியை படிக்க: ஜிம்பாப்வே: புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் துணை அதிபர்

மரங்களை பேணும் அதிகாரி:

பட மூலாதாரம், Facebook
ஓய்வு பெற்ற தமிழக வனத் துறை அதிகாரியான 66 வயது சுந்தரராஜு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த மரங்களை ஆவணப்படுத்திவருகிறார்.

ஜெயலலிதா வீட்டில் சோதனை ஏன்?:

பட மூலாதாரம், Getty Images
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரிய செய்தியாகியுள்ளது. "இது முறையான சோதனை நடவடிக்கைகளின் ஓர் அங்கமா? அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டு முறையா?" என்று பிபிசி தமிழின் வாதம்-விவாதம் பகுதியில் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த பதிலை தொகுத்து வழங்குகிறோம்.
செய்தியை படிக்க: ஜெயலலிதா இறந்து ஓராண்டு கழித்து அவர் வீட்டில் வருமான வரி சோதனை ஏன்?

கர்ப்பிணிகளின் சிரமங்கள்:
குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், அங்குள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து ஆராய, நான்கு பெண்கள் புல்லட்டில் பயணிக்கின்றனர். அவர்களுடன் பிபிசியும் பயணித்தது. அதன் முதல் காணொளியான இதில், மருத்துவமனை இல்லாத ஒரு கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து ஆராய்கின்றனர்.
செய்தியை படிக்க: குஜராத்: கர்ப்பிணிகளின் சிரமங்களை அறிய புறப்பட்ட 'புல்லட் பெண்கள்'

ஆளில்லா தேசத்துக்கு மன்னர்:

பட மூலாதாரம், Facebook
அண்மை நாட்களில் இந்திய இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்களில் பரவலான விவாதப் பொருளாகிவிட்டார். விசித்திரமான கோரிக்கையை முன் வைக்கும் அந்த இளைஞரின் பெயர் சுயஷ் தீக்ஷித்.
செய்தியை படிக்க: ஆளில்லா தேசத்துக்கு மன்னரான இந்திய இளைஞர் - உரிமை சாத்தியமா?

மிஸ் வேர்ல்டின் புகைப்படத் தொகுப்பு:

பட மூலாதாரம், Getty Images
பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.

இந்திரா மதச்சார்பற்றவரா?

பட மூலாதாரம், Getty Images
நான் இந்திரா காந்தியைப் பார்ப்பதற்கு முன்பே பெரோஸ் காந்தியை மிகவும் நெருக்கமாக பார்த்துள்ளேன். காரணம், எனது மாமா சயீத் வாசி நக்வியின் ரேபரேலி சட்டமன்றத் தொகுதி அமைத்திருந்த அதே ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பெரோஸ் இருந்தார்.
செய்தியை படிக்க: இந்திரா மதச்சார்பற்றவரா? என்ன சொல்கிறது வரலாறு?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


































