லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு எனத் தகவல்: போலீஸ் சுற்றி வளைத்தது

பிரசுரிக்கப்பட்டது

லண்டன் நகரின் முக்கியப் பகுதியான ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் டியூப் (சுரங்க ரயில்) ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் தகவல்களை அடுத்து ஆயுதப் போலீசார் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் போலீஸ்
படக்குறிப்பு, சுரங்க ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு என்று தகவல் வெளியானதை அடுத்து ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் ஆயுதங்களோடு விரையும் போலீசார்.

பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கும்பட்சத்தில் எடுக்கவேண்டிய பதில் நடவடிக்கையை எடுத்துவருவதாக கூறியிருக்கும் மாநகரக் காவல் துறை, ரயில் நிலையம் அருகில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் உள்ள மக்கள் கட்டடங்களுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி தமது டிவிட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளது.

"வாடிக்கையாளர் தொடர்புடைய ஒரு நிகழ்வை விசாரித்து வருவதால் ஆக்ஸ்ஃபோர்டு சர்க்கஸ் டியூப் ரயில் நிலையம் மூடப்படுவதாக," 'டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன்' தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் போலீஸ்

மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு அந்த ரயில் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றதாக பிபிசி செய்தியாளர் ஹெலன் புஷ்பை தெரிவித்துள்ளார். மக்கள் "கத்திக்கொண்டும் அழுதுகொண்டும்" இருந்ததைப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆயுதம் தாங்கிய, ஆயுதமற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உயிரிழப்புகள் எதையும் போலீஸ் பார்க்கவில்லை என்றும் அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோர்டு தெருவில் போலீஸ்

மக்கள் நெருக்கடி அதிகமாக இருப்பதை தவிர்ப்பதற்காக, அருகாமையில் உள்ள பாண்ட் ஸ்ட்ரீட் சுரங்க ரயில் நிலையமும் மூடப்பட்டுள்ளது.

"ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸில் நடந்த ஒரு சம்பவத்துக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறோம். அந்நிலையம் மூடப்பட்டுள்ளது. அந்தப் பகுதிக்கு செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும். அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்கிறார்கள்," என்று பிரிட்டிஷ் போக்குவரத்து போலீசார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்ஃபோர்டு தெரு முனையில் இருந்து ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் சுரங்க ரயில் நிலையத்தில் நுழையும் இடம்.

மக்கள் ஆக்ஸ்ஃபோர்ட் சர்க்கஸ் சுரங்க நிலையத்தை விட்டு கத்திக்கொண்டும் அலறிக்கொண்டும் மக்கள் ஓடியபோது தாம் அங்கிருந்ததாக லண்டனைச் சேர்ந்த கிரெக் ஓவன்(37) என்பவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :