பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை
பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தை வெளிநாடுகளில் இருந்து இயக்கிய போலி செய்தி பக்கங்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது.


பட மூலாதாரம், AFP/GETTYIMAGES
இந்தோனீஷியாவின் பாலி தீவிலுள்ள, அகுங் எரிமலை சீற்றத்தில் வெளியேறும் சாம்பல் நான்கு ஆயிரம் மீட்டர் வரை செல்வதால், விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியை வாசிக்க: பாலி எரிமலை சீற்றம்: விமான சேவைகளுக்கு `அபாய எச்சரிக்கை` விடுப்பு


பட மூலாதாரம், EPA
சௌதி அரேபியா மற்றும் இரான். இரண்டுமே நீண்டகாலமாக எதிரி நாடுகள். ஆனால், அண்மைக் காலத்தில் இந்த இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது ஏன்?
செய்தியை வாசிக்க: சௌதியும் இரானும் எதிரிகளாக இருப்பது ஏன்? மத்திய கிழக்கை பிளவுபடுத்தும் பகைமையின் பின்னணி


பட மூலாதாரம், PUBLIC DOMAIN
காணாமல் போன ஏ ஆர் ஏ சான் ஹுவான் என்ற அர்ஜென்டினாவின் நீர்முழுகி கப்பலில் 44 பேர் உள்ளனர். காணாமல் போனதற்கான காரணம் இன்னும் தெளிவுபடாத நிலையில், பயங்கரமான நீர்முழுகிக் கப்பல் பேரழிவுகளின் பட்டியலில் சன் குவானும் சேர்ந்துவிடும். இது போன்ற பல அழிவுகள், போரினால் அல்லாமல் விபத்துகளால் நிகழ்ந்தவையாகும்.
செய்தியை வாசிக்க: உலகின் மிக மோசமான நீர்மூழ்கி கப்பல் விபத்துகள்

2008 நவம்பர் 26 அன்று மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களில் உயிரோடு பிடிபட்ட ஒரே தீவிரவாதியும், 2012ம் ஆண்டு இந்தியாவால் தூக்கிலிடப்பட்டவருமான அஜ்மல் கசாப்புக்கு எதிராக சாட்சியளித்த இளம்பெண் தேவிகா, தனது நினைவுகளை பகிர்ந்துக்கொள்கிறார்.


பட மூலாதாரம், Getty Images
லிபியா கடற்கரையில் கடந்த சனிக்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 31 குடியேறிகள் உயிரிழந்தனர்.
செய்தியை வாசிக்க: லிபியா: ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகளின் படகு கவிழ்ந்து 31 பேர் பலி


பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இஸ்லாமியவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுயத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்துள்ளது.
செய்தியை வாசிக்க: பாகிஸ்தான்: கலவரத்தை தடுக்க ராணுவத்திற்கு அழைப்பு


பட மூலாதாரம், CCTV/HANDOUT VIA REUTERS
சீனாவில், ஷாங்காய்க்கு தெற்கில் உள்ள கிழக்கு துறைமுக நகரமான நிங்க்போவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியை வாசிக்க: சீன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து : இருவர் பலி, பலர் படுகாயம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

































