பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை..
பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
ஹைதராபாத்தில் இவான்கா டிரம்ப்

பட மூலாதாரம், Ges2017
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இம்மாநாடு குறித்த 8 சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
செய்தியை வாசிக்க: இவான்கா டிரம்ப் பங்கேற்கும் ஹைதராபாத் மாநாடு : 8 சுவாரஸ்ய தகவல்கள்

பாலுறவு - ஆராய்ச்சி முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
செய்தியை வாசிக்க: 'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்

ராஜவரோதயம் சம்பந்தன் நிகழ்த்திய உரை

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA
இலங்கை நாடாளுமன்றத்தில் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் இறுதி நாளான நவம்பர் 16ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ராஜவரோதயம் சம்பந்தன் நிகழ்த்திய உரை அண்மைக் காலத்தில் அவர் நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி நிகழ்த்தியிருக்கக்கூடிய உரைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
செய்தியை வாசிக்க:புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பது ஏன்?

பாலி விமான நிலையம் மூடல்

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் மலை, எரிமலை சாம்பல்களை வெளியேற்றி வருவதால், பாலி சர்வதேச விமானநிலையத்தை அதிகாரிகள் இரண்டாம் நாளாக மூடியுள்ளனர்.
செய்தியை வாசிக்க: பாலி எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற மறுப்பு

ஆக்டோபஸின் அசாதாரண செயல்
தண்ணீருக்குள் சமவெளி பகுதியில் இருக்கிறபோது, ஆபத்தில் சிக்காமல் இருக்க இந்த ஆக்டோபஸ் அசாதாரண செயலை செய்கிறது. (காணொளி)

மும்பை தாக்குதல்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். அதனை தொடர்ந்து அஜ்மல் கசாப்பின் கிரமாத்தில் நிலவிய சூழலை தெரிந்துக் கொள்ள அங்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தனது அனுபவத்தை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.

தேர்வு நாளில்வினோத நடவடிக்கை

பட மூலாதாரம், AFP
தென் கொரியாவில், சிசாட் (CSAT) தேர்வு நாளில் நடைபெறும் வினோதமான நடவடிக்கைகளை இங்கு தொகுத்துள்ளது பிபிசி. ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கும் மற்றும் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும். இது சிசாட் (CSAT) எனப்படும் கல்லூரி கல்வியியல் திறன் தேர்வு நடத்தப்படும் நாள்.
செய்தியை வாசிக்க:தென் கொரியா: ஒரு தேர்வுக்கு இவ்வளவு அக்கப்போரா?

குழந்தை மணமகள்கள்
வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் குழந்தை மணமகள்கள் அதிக அளவில் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது. (காணொளி)

சோஃபியா ரோபோவின் விருப்பம்

உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோவான சௌதி அரேபியாவின் சோஃபியா ரோபோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.
செய்தியை வாசிக்க:குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சோஃபியா ரோபோ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


































