பிபிசி தமிழில் இன்று...
பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
மியான்மரில் போப் ஃபிரான்சிஸ்

பட மூலாதாரம், AFP
மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் ஃபிரான்சிஸ், "அனைத்து இனக் குழுக்களுக்கும் மரியாதை வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளபோதும், 'ரோஹிஞ்சா முஸ்லிம்கள்' என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தவிர்த்தார்.
செய்தியை வாசிக்க: மியான்மர்: ரோஹிஞ்சாக்களை பற்றி பேசுவதைத் தவிர்த்தார் போப் ஃபிரான்சிஸ்

பாகிஸ்தானில் இந்து பெண்
கலை கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவியான உஜாலா ஹயாட், பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் என்றால் மக்கள் எவ்வாறு பழகுகின்றனர், இந்துக்கள் குறித்த பார்வை என்ன என்பதை தெரிந்து கொள்ள, இந்துவை போல பொட்டு வைத்து கொண்டு பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்தார்.

ஹைதராபாத்தில் இவான்கா டிரம்ப்

பட மூலாதாரம், Ges2017
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்துகொள்கிறார். இம்மாநாடு குறித்த 8 சுவாரஸ்ய தகவல்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
செய்தியை வாசிக்க: இவான்கா டிரம்ப் பங்கேற்கும் ஹைதராபாத் மாநாடு : 8 சுவாரஸ்ய தகவல்கள்

பாலுறவு - ஆராய்ச்சி முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் உள்ள இளம் வயதினர் எதிர் பாலின துணைகளுடன் ஆசனவாய் வழி பாலுறவு உள்பட பலவகையாக பாலுறவு வழிகளில் ஈடுபடுவதாக ஆராய்ச்சி ஒன்றின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
செய்தியை வாசிக்க: 'பாலுறவில் தடைகளை தகர்த்தெறிய இளம் வயதினர் ஆர்வம்'- ஆய்வு தகவல்

இறந்து கரையொதுங்கிய டால்ஃபின்கள்

பட மூலாதாரம், AFP
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடற்கரையோர கிராமம் ஒன்றில் நேற்று கரையொதுங்கிய 30க்கும் மேற்பட்ட டால்ஃபின்களில் நான்கு உயிரிழந்தன. இறப்பிற்கான காரணத்தை அறிவதற்காக அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
செய்தியை வாசிக்க: தூத்துக்குடி: இறந்து கரையொதுங்கிய டால்ஃபின்கள், காரணம் என்ன?

ஆக்டோபஸின் அசாதாரண செயல்
தண்ணீருக்குள் சமவெளி பகுதியில் இருக்கிறபோது, ஆபத்தில் சிக்காமல் இருக்க இந்த ஆக்டோபஸ் அசாதாரண செயலை செய்கிறது. (காணொளி)

சோஃபியா ரோபோவின் விருப்பம்

உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோவான சௌதி அரேபியாவின் சோஃபியா ரோபோ, குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது.
செய்தியை வாசிக்க:குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் சோஃபியா ரோபோ

மும்பை தாக்குதல்

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். அதனை தொடர்ந்து அஜ்மல் கசாப்பின் கிரமாத்தில் நிலவிய சூழலை தெரிந்துக் கொள்ள அங்குச் சென்ற பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி தனது அனுபவத்தை இந்த கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறார்.

தேர்வு நாளில்வினோத நடவடிக்கை

பட மூலாதாரம், AFP
தென் கொரியாவில், சிசாட் (CSAT) தேர்வு நாளில் நடைபெறும் வினோதமான நடவடிக்கைகளை இங்கு தொகுத்துள்ளது பிபிசி. ஆண்டு தோறும், ஒரு நாள் தென் கொரியா முழுவதும் ஸ்தம்பித்து போகும். பயண நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கும் மற்றும் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும். இது சிசாட் (CSAT) எனப்படும் கல்லூரி கல்வியியல் திறன் தேர்வு நடத்தப்படும் நாள்.
செய்தியை வாசிக்க:தென் கொரியா: ஒரு தேர்வுக்கு இவ்வளவு அக்கப்போரா?

குழந்தை மணமகள்கள்
வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் குழந்தை மணமகள்கள் அதிக அளவில் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது. (காணொளி)

பாலி விமான நிலையம் மூடல்

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள அகுங் மலை, எரிமலை சாம்பல்களை வெளியேற்றி வருவதால், பாலி சர்வதேச விமானநிலையத்தை அதிகாரிகள் இரண்டாம் நாளாக மூடியுள்ளனர்.
செய்தியை வாசிக்க: பாலி எரிமலை சீற்றம்: மக்கள் வெளியேற மறுப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



































