பிபிசி தமிழில் ஒரு மணி வரை
பிபிசி தமிழில் மதியம் 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே?

பட மூலாதாரம், EPA
இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது.
செய்தியை வாசிக்க:இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது?

பெற்றோரை தேடி பேருந்தின் அடியில் அமர்ந்து சீன சிறுவர்களின் திரில் பயணம்

பட மூலாதாரம், SOUTHERN MORNING POST
பேருந்தின் அடியில் இருந்துகொண்டே 80 கிலோமீட்டர் (50 மைல்) பயணம் செய்த இரண்டு சீன சிறுவர்களின் புகைப்படங்களால், அந்நாட்டில் பெற்றோரால் தனியாக விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்கள் பற்றி இணையத்தில் கோபமான விவாதங்கள் எழுந்துள்ளன.
செய்தியை வாசிக்க: பெற்றோரை தேடி பேருந்தின் அடியில் அமர்ந்து சீன சிறுவர்களின் திரில் பயணம்

நாட்டையும் பைக்குகளையும் நேசிக்கும் ஒரு பைக்கர்கள் குழு

முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்கக்கூடிய புதிய ஏவுகணையை ஏவியது வட கொரியா

பட மூலாதாரம், Getty Images
ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

பட மூலாதாரம், Getty Images
தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
செய்தியை வாசிக்க: கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை

கல் தட்டுப்பாடு நீங்கினால், புவி சார் குறியீடு பலன் தரும்: மாமல்லபுர சிற்பிகள்

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP/GETTY IMAGES
ஏழாம் நுற்றாண்டில் பல்லவர் காலத்தில் இருந்து கலைநயம் மிக்க கற்சிற்பங்கள் செய்யப்படும் இடமாக மாமல்லபுரம் விளங்கிவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

































