பிபிசி தமிழில் இன்று..

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

பிரகாஷ் ராஜ் பிரத்யேக பேட்டி

பிரகாஷ் ராஜ்

நடிகரும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்துவரும் கருத்துகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Presentational grey line

நிராகரிப்புக் கடிதம் பெறுவதில் சாதனை

`ரெகிரெட் ஐயர்`

பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் சத்யநாராயணா ஐயர். ஆனால், அவர் தன் பெயரை 'ரெக்ரெட் ஐயர்' என்று மாற்றிக்கொண்டார். எழுத்தாளர், பதிப்பாளர், புகைப்படக் கலைஞர், ஊடகவியலாளர், கார்டூனிஸ்ட் என்று இவர் தம்மை வெவ்வேறு அடைமொழிகளில் அழைத்துக் கொள்கிறார்.

Presentational grey line

எகிப்து: பாதிக்கப்படும் ஓரு பாலின சேர்க்கையாளார்கள்

காணொளிக் குறிப்பு, எகிப்து நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஓரு பாலின சேர்க்கையாளார்கள்

ஒரு பாலின சேர்க்கையை முழுமையாகக் குற்றமாக்கும் சட்டத்தை எகிப்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுபதுக்கும் அதிகமானோர் முதன் முறையாக அந்நாட்டில் முன்மொழிந்துள்ளனர்.

Presentational grey line

பிட்காயின் - நீர்க்குமிழியா? இல்லைஎதிர்காலமா?

பிட்காயின் - நீர்க்குமிழியா? இல்லை எதிர்காலமா?

பிட்காயினுக்கான கணக்கை எனது திறன்பேசியில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கும் மேலான நிலையில், அதன் மீதமான பெருகிவரும் நம்பிக்கை தற்போது 1,713 டாலர்களை வந்தடைந்துள்ளது.

Presentational grey line

பெற்றோரை தேடி பேருந்தின் அடியில் அமர்ந்து சீன சிறுவர்களின் திரில் பயணம்

பெற்றோரை தேடி பேருந்தின் அடியில் அமர்ந்து சீன சிறுவர்களின் திரில் பயணம்

பேருந்தின் அடியில் இருந்துகொண்டே 80 கிலோமீட்டர் (50 மைல்) பயணம் செய்த இரண்டு சீன சிறுவர்களின் புகைப்படங்களால், அந்நாட்டில் பெற்றோரால் தனியாக விடப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்கள் பற்றி இணையத்தில் கோபமான விவாதங்கள் எழுந்துள்ளன.

Presentational grey line

புதிய ஏவுகணையை ஏவியது வட கொரியா

முழு அமெரிக்க கண்டத்தையும் தாக்கக்கூடிய புதிய ஏவுகணையை ஏவியது வட கொரியா

ஒரு அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி கூறுகிறது.

Presentational grey line

இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே?

காணொளிக் குறிப்பு, யார் இந்த மேகன் மார்கில்?

இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

Presentational grey line

நாட்டையும் பைக்குகளையும் நேசிக்கும் ஒரு பைக்கர்கள் குழு

காணொளிக் குறிப்பு, நாட்டையும் பைக்குகளையும் நேசிக்கும் ஒரு பைக்கர்கள் குழு

மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் பயணித்து, ஐ.எஸ் அமைப்புடன் போரிடும் ராணுவத்தினருக்கு உதவி வருகிறது இராக்கில் உள்ள ஒரு பைக்கர்கள் குழு.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :