தெற்கு ரஷ்யா வெள்ளம்: அரசு நடவடிக்கை பற்றிய விசாரணைக்கு உத்தரவு

கிராஸ்னொடார் பிராந்தியத்தைக் காட்டும் வரைபடம்
படக்குறிப்பு, கிராஸ்னொடார் பிராந்தியத்தைக் காட்டும் வரைபடம்
பிரசுரிக்கப்பட்டது

மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் தென் பிராந்தியமான கிராஸ்னொடாரில், உயிரிழப்புகளைத் தவிர்க்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்று ஆராயும் விசாரணை ஒன்றுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

இப்பகுதியில் பெய்த அடைமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீதிகளையும் வீடுகளையும் அடித்துச் சென்றதில் நூற்று நாற்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

பாய்ந்துவந்த வெள்ளம் தங்களை வந்தடைந்த வேளையில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்ததால், பலர் தப்பிக்க வழியில்லாமல் போய்விட்டதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி மேட்டுப்பாங்கான இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக வதிவிடங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் சேதத்தின் அளவை ஹெலிகாப்டரில் பறந்தபடி அதிபர் விளாடிமிர் புடின் பார்வையிட்டுள்ளார்.