பிள்ளையை வேண்டுமென்றே விரைவுச் சாலையில் விட்ட தாய்க்கு தண்டனை

விரைவுச் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவில் ஒன்பது மாதக் குழந்தையை வேண்டுமென்றே விரைவுப் சாலையில் விட்டுச்சென்ற தாய்க்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

காதலன் விட்டுப்போன பின்னர் குழந்தையை தனியாக பாரமரிக்க அலுத்துப்போன 24 வயது எலெனா ஒஸினா, குழந்தை ஏதாவது வாகனத்தில் அடிப்பட்டு இறந்துவிடும் என நினைத்து அதனை விரைவுச் சாலையில் விட்டதாக மாஸ்கோ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தையை கொல்ல முயன்றதாக அத்தாயும் அவரது சகோதரரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

விரைவுச் சாலையில் குழந்தை விடப்பட்ட பத்து நிமிடத்தில் அவ்வழியாக கார் ஓட்டி வந்த பெண் ஒருவர் குழந்தையைக் காப்பாற்றினார்.

தற்போது அக்குழந்தை வேறு ஒருவர் வீட்டில் வளர்கிறது.