டமாஸ்கஸில் இரட்டைக் குண்டுவெடிப்பு : 14 பேர் பலி

மர்ஜா சதுக்கத்தில் அமைந்துள்ள உள்துறை அமைச்சு அலுவலகம்
படக்குறிப்பு, மர்ஜா சதுக்கத்தில் அமைந்துள்ள உள்துறை அமைச்சு அலுவலகம்
பிரசுரிக்கப்பட்டது

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடந்த இரட்டை தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

மர்ஜா சதுக்கத்தில் நடந்த இந்தக் குண்டுவெடிப்புக்களில் மேலும் பலர் காயமடைந்ததாக அரசாங்கத்தினால் நடத்தப்படும் அல் இக்கம்பரியா தொலைக்காட்சி கூறியுள்ளது.

இதே சதுக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து அலெப்போ நகரை மீளக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளில் அரச படைகள் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கடைகள் எல்லாம் வெடித்துச் சிதறி பரந்துபட்ட அழிவு ஏற்படுள்ளதாக முதல் வந்த படங்கள் காட்டுகின்றன.