தக்சிம் சதுக்கத்தில் பொலிஸார் நுழைந்தனர்

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் இரு வாரங்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தாக்சிம் சதுக்கத்தில் நுழைந்த பொலிஸார் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டக்கள் பிரயோகம் செய்து பொலிஸார் தாக்கியதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் அருகில் உள்ள ஜெசி பூங்காவுக்கு தப்பி ஓடினார்கள்.

அவர்களில் பலர் அங்கு முகாம் அமைத்துள்ளனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் படாசுகளையும், தீக்குண்டுகளையும் கற்களையும் பொலிஸா மீது வீசினார்கள்.
ஜெசி பூங்காவிலும் பொலிஸார் நுழையவே நிலைமை மேலும் மோசமாகியது.

பிரதமர் ரெஜப் தைப் எர்தோவான் அரசாங்கம் மேலும் மேலும் சர்வாதிகாரப் போக்குடன் நடப்பதாகவும், கடுமையான இஸ்லாமிய பெறுமானங்களை ஒரு மதசார்பற்ற நாட்டின் மீது அமல்படுத்த விளைவதாகவும் கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.
கவச வாகனங்களின் சகிதம் வந்தே பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.




























