ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரட் பதவியேற்றார்

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரட் அவர்கள் பதவியேற்றார்.

பழைய பிரதமரான ஜூலியா கில்லார்ட் அவர்கள் தொழில் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிய மறுதினம் கெவின் ரட் பிரதமராகப் பதவியேற்றார்.

தலைமை ஆளுனர் குயிண்டின் பிரஸ் முன்பாக அரச இல்லத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

அதன் பின்னர், அரசியலில் இருந்து விலகும் கில்லார்ட் அவர்களுக்கு தனது மரியாதையை நாடாளுமன்ற உரை ஒன்றில் கெவின் ரட் அவர்கள் செலுத்தினார்.

செப்டம்பர் 14ஆம் திகதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்தத் தலைமை மாற்றம் வருகிறது. அந்தத் தேர்தலில் தொழில் கட்சி தோல்வியடையும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.