பப்புவா நியு கினி முகாம் வன்முறைகளில் ஒருவர் பலி, 77 பேர் காயம்

பப்புவா நியு கினி தஞ்சக் கோரிக்கையாளர் விசாரணை முகாம்
படக்குறிப்பு, பப்புவா நியு கினி தஞ்சக் கோரிக்கையாளர் விசாரணை முகாம்
பிரசுரிக்கப்பட்டது

பப்புவா நியு கினியில் உள்ள ஆஸ்திரேலிய குடியேறிகள் தடுப்பு முகாமில் இரண்டாவது இரவாக நடந்துள்ள வன்முறைகளில் தஞ்சக் கோரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 77 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கு பப்புவா நியு கினியில் உள்ள மனுஸ் தீவு முகாமிலிருந்து தஞ்சக் கோரிக்கையாளர்கள் பலர் குறுகிய நேரத்திற்கு தப்பிச் சென்றிருந்ததாக வெளியான தகவல்களை அடுத்து இந்த வன்முறைகள் பற்றிய தகவல்களும் வந்துள்ளன.

இந்த உயிரிழப்பு ஒரு பெரும் துன்பியல் சம்பவம் என்று ஆஸ்திரேலிய குடிவரத்துறை அமைச்சர் ஸ்காட் மாரிஸன் கூறியுள்ளார்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ள தடுப்பு முகாம்களில் தஞ்சக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் இல்லையென்றும் அவர் கூறியுள்ளார்.

மனுஸ் தீவு தடுப்பு முகாமை மூடிவிடுமாறு அகதிகளுக்கான அமைப்புகள் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.