ஆப்கான் அதிபரின் இலங்கை விஜயம் ஒத்திவைப்பு

பட மூலாதாரம்,
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் குணார் பிராந்தியத்தில் சோதனைச்சாவடி ஒன்றின் மீது தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தப்பட்சம் 20 ஆப்கான் படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்தே ஆப்கானிஸ்தான் அதிபரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் ஆப்கானிஸ்தான் அதிபர் கவலையடைந்துள்ளதாகவும், ஆகவே தான் இலங்கைக்கு இடம்பெறவிருந்த விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் இந்த பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான கிளர்ச்சியாளர்கள் பங்கேற்றதாக இராணுவ ஜெனரல் மொஹமது ஜாகீர் அசிமி தெரிவித்தார்.
பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகாமையில் நடைபெற்ற இந்த தாக்குதலில் தாக்குதலை நடத்திய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அத்தோடு 7 படையினரை பிடித்து வைத்துள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு படையினர் வெளியேறவுள்ள நிலையில், ஆயுததாரிகளின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.




























