இராக் குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் பலி

இராக் குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் பலி
படக்குறிப்பு, இராக் குண்டுத் தாக்குதல்களில் 16 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

இராக்கிய தலைநகர் பாக்தாதில் பல இடங்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 16 பேராவது கொல்லப்பட்டார்கள்.

பாக்தாதில் சியாக்கள் அதிகமாக வாழும் பகுதியில் கார் மற்றும் தெருவோரக் குண்டுகள் வெடித்துள்ளன.

அண்டை நாடான சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் இராக்கின் சுன்னி அரபு முஸ்லிம் சிறுபான்மையினர் மத்தில் பரவலாகக் காணப்படும் அமைதியீனம் ஆகியவை காரணமாக இராக்கில் கடந்த ஆண்டில் வன்செயல்கள் கணிசமாக அதிகரித்து வந்துள்ளன.