இறப்பதைப் பற்றிப் பேசுவதற்கு பிரிட்டனில் நிலவும் மனத்தடை

பட மூலாதாரம், AP
இறப்பு என்பது இயல்பானதுதான் என்றாலும், அதைப் பற்றி விவாதிப்பது அல்லது பேசிக்கொள்வது என்பது பிரிட்டனில் இன்னும் ஒரு அபூர்வமாக நடக்கும் ஒன்றாகவே இருக்கிறது என்று பிரிட்டனில் சில சேவை நிறுவனங்கள் நடத்திய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
பிரிட்டனில் ஐந்தில் ஒரு பங்கினர்தான் தங்களது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தங்களது விருப்பங்களைப் பற்றி வேறு யாரிடமோ பேசியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
பிரிட்டனில் இது போல நிலை இருந்தாலும் வேறு பல கலாசாரங்களில், இறப்பு குறித்துப் பேசுவது என்பது தவிர்க்கப்படும் ஒரு விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை.
ஆனால் 'இறப்பு குறித்த விஷயங்களுக்கான கூட்டணி ' என்ற தன்னார்வ அமைப்பு நாட்டில் மூன்றில் ஒரு பங்கினரே உயில் எழுதி வைத்திருக்கின்றனர் அல்லது தங்களுக்கு என்ன விதமான இறுதிக்கிரியைகள் வேண்டும் என்ற விருப்பத்தைப் பற்றி விவாதித்திருக்கின்றனர் என்று 2,000 பேருடன் நடத்திய ஆய்வில் கண்டறிந்திருக்கிறது.
இறப்பு மற்றம் இறப்பது குறித்து தேசிய அளவில் ஒரு விவாதம் நடத்தப்படவேண்டும் என்று கூறும் அந்த அமைப்பு, பிரிட்டிஷ் மக்கள் இறப்பதைப் பற்றி மேலும் அதிகமாகப் பேசினால் தவிர, மரணம் சம்பவிக்கும்போது அவர்கள் பொருத்தமான சேவையைப் பெறமாட்டார்கள் என்று கூறுகிறது.




























