வடகொரிய உயர்மட்டத் தலைவர் தென்கொரியா பயணம்

பிரசுரிக்கப்பட்டது

வடகொரியாவின் இரண்டாவது சக்தி மிக்க தலைவராகப் பார்க்கப்படுபவர், தென்கொரியாவுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பேச்சு நடத்தியுள்ளார்.

வடகொரிய உயர் தலைவர் தென்கொரியா பயணம்
படக்குறிப்பு, வடகொரிய உயர் தலைவர் தென்கொரியா பயணம்

கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த உயர் மட்ட கலந்துரையாடலாக இது பார்க்கப்படுகின்றது.

ஹவாங் பியொங் சோ அவர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்சியோனுக்கு சென்று, அங்கு தென்கொரியாவின் ஒருமைப்பாட்டு அமைச்சருடனான சமரசப் பேச்சுக்களில் கலந்துகொண்டுள்ளார்.

அடுத்த 5 வாரங்களுக்குள் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்த இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாத காலமாக பொது இடங்களில் காணப்படாத வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் அவர்களின் உடல்நிலை குறித்த ஊகங்கள் வெளியான தருணத்தில் இந்தப் பயணம் நடந்துள்ளது.