"சியர்ரா லியோனில் புதிதாக இபோலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது"
இபோலா இரத்தக் காய்ச்சலினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோனின் சில பாங்களில் இந்த நோய்த் தொற்று புதிதாக வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது என சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், EPA
அந்தப் பிராந்தியமே அச்சத்திலும் கவலையிலும் மூழ்கியுள்ளதாக சியர்ரா லியோன் சென்றுள்ள சேவ் தி சில்ரன் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜஸ்டின் ஃபோர்ஸித் பிபிசியிடம் கூறினார்.
"நோய்ப் பரவலை கட்டுப்படுத்திவிட்டோம் என்று கூறும் நிலையில் நாம் இல்லை" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் சர்வதேச உதவி நடவடிக்கைகள் களத்தில் மாற்றங்களைக் காட்டத் துவங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இபோலாவை பரப்பாமல் இருக்க எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி கூடுதலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்.
குறிப்பாக இபோலா நோய் வந்து இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு முன் கழுவும் வழக்கத்தைக் கைவிடுவது பற்றி மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.




























