கனடிய கடற்படையில் மதுவுக்குத் தடை

பிரசுரிக்கப்பட்டது

கனடாவின் கடற்படைக் கப்பல்களில் பணி நிமித்தம் செல்லும்போது, மது அருந்த முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த நீர்முழ்கிக் கப்பல்
படக்குறிப்பு, கனடாவைச் சேர்ந்த நீர்முழ்கிக் கப்பல்

கலிபோர்னியாவுக்கு அடுத்த கடல்பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச நாடுகள் கலந்துகொண்ட கடல் பயிற்சி ஒத்திகையின்போது, கனடாவின் கடற்படைக் கப்பலில் இருந்த சில வீரர்கள் மது போதையில் இருந்ததன் காரணமாக அந்தக் கப்பலை பயிற்சி நடவடிக்கையில் இருந்து திரும்பப்பெற வேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கனடா கடற்படை மாலுமிகள் மூவர், போதையில் இருந்ததாகவும், மேலும் அவர்கள் கடைகளில் போய் திருடியதாகவும், தவறான பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இனி, கடற்படைக் கப்பல்களில் இருக்கும் பீர் வினியோகிக்கும் இயந்திரங்கள் அகற்றப்படும் என்று மதுவுக்கான தடையை அறிவித்த வைஸ் அட்மிரஸ் மார்க் நார்மன் கூறியுள்ளார்.

இருந்தும் கிறிஸ்துமஸ் மற்றும் கப்பலின் கேப்டன் அனுமதிக்கும் சிறப்பு நேரங்களில் மது அருந்த அனுமதி அளிக்கப்படும்.

அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது.

காமன்வெல்த் நாடுகளான பிரிட்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளும் தம்முடைய கடற்படையினர் கப்பல்களில் மது அருந்த அனுமதிப்பதில்லை.