முகநூலில் வலம்வந்த மூன்று செய்திகள்: சுவரோவியங்கள்; மீத்தேன்; இலங்கைத் தேர்தல்!

இந்தியத் தலைநகர் டில்லியில் உபெர் வாடகைக்காரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண் தொடர்பான செய்தி இந்தியாவின் முக்கிய செய்தியாக பிரதான ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. அந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்புக் கருத்துக்களும் முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விரிவாக அலசப்பட்டது. ஆனால் இதைத்தவிர மற்ற பல செய்திகள் இந்தியர்கள் மத்தியில் விவாதத்தைத் தோற்றுவித்திருந்தாலும் முதன்மை ஊடகங்களில் அவை அதிக அளவு இடம் பிடிக்கவில்லை. இப்படியான செய்திகள் பல தென்னிந்தியாவிலிருந்து வந்தன.
யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்: கொச்சியை கலக்கிய சுவரோவியர்கள்
ஒரு ஓவியர் அல்லது ஓவியக்குழுவினர் கொச்சித் தெருவின் சுவர்களை தமது கலைநயமிக்க, கருத்தாழமான கோட்டோவியங்கள் மூலம் அலங்கரித்தார்கள். சேலை கட்டிய விண்வெளி வீரர்; இந்திய உணவைப்பரிமாறும் அமெரிக்காவின் கெண்டக்கி சிக்கன் கடை நிறுவனர் என்று மேற்குலக முக்கியஸ்தர்களுக்கு இந்திய சாயலையும், சாயத்தையும் கொடுத்த ஓவியங்கள் கொச்சியை கலக்கின. இந்த ஓவியங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் இவை குறித்த சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தின.
யாரென்று ஊகியுங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட இந்த ஓவியர் (அல்லது ஓவியர்கள்) இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையான தமது கண்காட்சியை இந்தமுறை இப்படித் துவக்கினார்கள். <link type="page"><caption> ரெட்டிட் சமூகவலைத்தளத்தில்</caption><url href="http://www.reddit.com/r/india/comments/2oghkg/graffiti_artwork_in_kochi_by_the_anonymous/" platform="highweb"/></link> இந்த தெருவோர கலைவடிவத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவான விவாதமும் நடந்தது.
<link type="page"><caption> இந்த ஓவியர்கள் பிபிசியிடமும் பேசினார்கள்.</caption><url href="http://www.bbc.co.uk/news/blogs-trending-30447979" platform="highweb"/></link>
காவேரியில் மீத்தேன் எடுப்பதை நிறுத்து #StopMethaneExplorationInKaveriDelta
பாலியல் பலாத்காரம் மற்றும் உபெர் மீதான தடைக்கு மத்தியில் எதிர்பாராத பிரச்சாரம் ஒன்று டுவிட்டரில் முக்கிய இடம்பிடித்தது. தென்னிந்தியாவின் காவிரிப்படுகையில் மீத்தேன் எடுப்பதை எதிர்க்கும் பிரச்சாரம் <link type="page"><caption> டுவிட்டரில்</caption><url href="https://twitter.com/search?q=%23StopMethaneExplorationInKaveriDelta&src=typd" platform="highweb"/></link> ஒரு நாளெல்லாம் முன்னணியில் இருந்தது.

தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் ஹைட்ராலிக் உடைப்பு முறையில் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தை உள்ளூர் விவசாயிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அந்த திட்டம் அங்கே முழுவீச்சில் துவக்காமல் அரசே அதை இடைநிறுத்தி வைத்திருந்தது.
இது ஓரளவுக்கு பழைய பிரச்சனை என்றும் சொல்லலாம். ஆனாலும் இது டுவிட்டரில் திடீரென இது முக்கிய இடத்தைப் பிடித்தது; செயற்பாட்டாளர்களின் ஒருங்கிணைக்கப்பட்ட தீவிர பிரச்சாரம் இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலே இருக்கும் டுவிட்டர் ஹாஷ்டேக்கை பயன்படுத்தி <link type="page"><caption> 50,000த்துக்கும்</caption><url href="https://twitter.com/search?q=%23StopMethaneExplorationInKaveriDelta&src=typd" platform="highweb"/></link> அதிகமானவர்கள் இதை பகிர்ந்திருந்தார்கள்; விவாதித்திருந்தார்கள்.
இலங்கைச் செய்தித்தாள்களின் முதல்பக்கம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ்வை ஆதரிக்கும் முதற்பக்க விளம்பரங்களை இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ஒருசேர வெளியிட்டது குறித்த விமர்சனம் தமிழ் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இலங்கையின் பிரதான ஊடகங்களின் முதற்பக்கம் ஒரே மாதிரியாக இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் பரவலாக தமிழ் முகநூலில் வலம் வந்தது. தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழி ஊடகங்கள் மீதும் இந்த விமர்சனம் சமாந்திரமாக முன்வைக்கப்பட்டது.





























