பெல்ஜியத்தில் பொதுவேலை நிறுத்தம் : பல சேவைகள் முடங்கின
பெல்ஜியத்தில் நடைபெறும் பொதுவேலை நிறுத்தம் காரணமாக, நாட்டில் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து ஆகியவை முடங்கிப் போயுள்ளன.

பட மூலாதாரம், Reuters
பல ஆண்டுகளில் பெல்ஜியத்தில் நடைபெற்ற மிகப் பெரிய பொதுவேலை நிறுத்தமாக இது பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சுமார் 600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 50,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சில ரயில்கள் அங்கு ஓடுகின்றன, பல இடங்களில் சாலைத் தடுப்புக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.
அரசின் செலவினக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலேயே, தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கான அழைப்பை விடுத்திருந்தன.
அங்கு ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி கூட்டணி அரசு ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது, மற்றும் ஆண்டுதோறும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அளிக்கப்படும் ஊதிய உயர்வை ஒத்தி வைப்பது என எண்ணியுள்ளத் திட்டங்களுக்கும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.




























