தாய்லாந்து இளவரசரின் முன்னாள் மனைவிக்கு பணம்: விவரம் வெளியிடத் தடை

பிரசுரிக்கப்பட்டது

தாய்லாந்தில் முடிக்குரிய இளவரசரும் அவரது மனைவியும் பிரிந்ததை அடுத்து மனைவி ஸ்ரீரஸ்மிக்கு வழங்கப்படுகின்ற பணம் மற்றும் சொத்தின் விவரங்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என தாய்லாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இளவரசருடன் ஸ்ரீரஸ்மி (கோப்புப் படம்)
படக்குறிப்பு, இளவரசருடன் ஸ்ரீரஸ்மி (கோப்புப் படம்)

முன்னாள் இளவரசியான ஸ்ரீரஸ்மிக்கு அறுபது லட்சம் டாலர்கள் வழங்கப்படுவதாக ராஜ குடும்பம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த பணத்தையும் சொத்தையும் வாங்கிக்கொண்டு இளவரசி பட்டத்தை துறக்க ஸ்ரீரஸ்மி சம்மதித்திருந்தார்.

பட்டத்து இளவரசருக்கும் மனைவிக்கும் இடையிலான உறவில் விரிசல் என சிலகாலமாகவே ஊகங்கள் நிலவிவந்தன.

ஆனால் ராஜ குடும்பம் பற்றி தாய்லாந்து ஊடகங்கள் உள்நாட்டில் செய்தி வெளியிடுவது சம்பந்தமாக அந்நாட்டில் கடுமையான சட்டங்கள் இருந்துவருகின்றன.