பிலிப்பைன்ஸ் சிறையில் ஆடம்பர வசதிகளுடன் சில கைதிகள்
பிலிப்பைன்ஸ் சிறையில் சில முக்கிய கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அந்த நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த அளவுக்கு ஆடம்பரமான வசதிகளுடன் அந்தக் கைதிகள் சிறையில் வாழ்ந்துள்ளனர்.
மணிலா சிறையில் போலிஸார் திடீர் தேடுதல் நடத்திய பொழுதே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிலிபிட்ஸ் என்னும் அந்தச் சிறையில் போதை மருந்து விற்பனை பெருமளவில் நடப்பதாக வந்த தகவலகளை அடுத்து போலிஸார் அங்கு தேடுதல் நடத்தியுள்ளனர்.
அங்கு குளிரூட்டப்பட்ட அறைகள், பளிங்கு பதிக்கப்பட்ட தரை, ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் பணம் நிரம்பிய அலமாரிகள் என பெரும் ஆடம்பரமாக சில முக்கிய கைதிகள் அங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
அங்கு விலைகூடிய விஸ்கி, கணினிகள் மற்றும் கைத்தொலைபேசி ஆகிய வசதிகளும் உண்டு.
இது குறித்து புலன்விசாரணை நடத்துவதாக பிலிப்பைன்ஸ் அரசு உறுதியளித்துள்ளது.




























