பாடத் திட்டத்தில் மேற்குலக மதிப்பீடுகள் ஊடுருவல்: சீன கல்வியமைச்சர்

பிரசுரிக்கப்பட்டது

சீனாவின் பல்கலைக்கழகங்களில் மேற்குலக விழுமியங்கள் ஊடுருவதைச் சாடியுள்ள அந்நாட்டின் கல்வியமைச்சர் யுவான் குயிரன், சோஷலிஸ சித்தாந்தத்தின் மீதான பிடிப்பு அதிகமாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சீன கல்வியமைச்சர் யுவான் குயிரன்
படக்குறிப்பு, சீன கல்வியமைச்சர் யுவான் குயிரன்

கம்யூனிஸ கட்சித் தலைமையையோ, சோஷலிஸ கட்டமைப்பையோ விமர்சிக்கும் வகையான விஷயங்கள் பாடத் திட்டங்களில் இருந்து நீக்கப்படுவதை உயர் கல்வி ஊழியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கல்வியாளர் மாநாடு ஒன்றில் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2012ல் அதிபராக ஸீ ஜின்பிங் பதவியேற்ற பிறகு கம்யூனிய கோட்பாடுகளை வலியுறுத்தும் நோக்கில், பாடத் திட்டங்களில் சீன அரசு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

அரசாங்கத்தை வெளிப்படையாக விமர்சித்த பேராசிரியர்கள் பலர், வேலையிழந்தும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ளனர்.

பல கட்சி அரசியல் முறையையும், ஊடக சுதந்திரத்தையும் மேற்குலக விழுமியமாக சீனாவின் கம்யூனிஸ கட்சி கருதுகிறது.