பாக்.: ஷியா பள்ளிவாசல் மீது தாக்குதல், 24 பேர் பலி

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று ( கோப்புப் படம்)
படக்குறிப்பு, பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று ( கோப்புப் படம்)
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானில் சிந்த் மாகாணத்தில் ஷியா பள்ளிவாசல் ஒன்றில் நடந்துள்ள தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷிகார்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தவுடன் இந்த வெடிச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிச் சம்பவத்தின் அதிர்வினால் பள்ளிவாசலின் கூரை இடிந்துவிழுந்துள்ளது.

இதனால் பள்ளிவாசலின் இடிபாடுகளுக்குள் பலபேர் சிக்கியிருந்தனர்.

யார் இந்தத் தாக்குதலை நடத்தியது என்பது உடனடியாக தெரியவில்லை.

ஆனால், கடந்த காலங்களில் சுன்னி ஆயுதக் குழுக்கள் ஷியா சிறுபான்மை சமூகத்தை இலக்குவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளன.

சிந்த் மாகாணத்தின் தலைநகர் கராச்சியின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் நவாஸ் ஷெரிப் அங்கு சென்றிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதலும் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.