ஸ்ரெப்ரெனீட்சா படுகொலை: ஐவருக்கு தண்டனை உறுதியானது

1000 முஸ்லிம் ஆண்களும் இளைஞர்களும் ஸ்ரெப்ரெனீட்சாவில் படுகொலை செய்யப்பட்டனர்
படக்குறிப்பு, 1000 முஸ்லிம் ஆண்களும் இளைஞர்களும் ஸ்ரெப்ரெனீட்சாவில் படுகொலை செய்யப்பட்டனர்
பிரசுரிக்கப்பட்டது

ஸ்ரெப்ரெனீட்சாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், பொஸ்னிய-செர்பிய இராணுவ உயர் அதிகாரிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனைகளை யூகோஸ்லோவியாவுக்கான ஐநாவின் போர்குற்றத் தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தப் படுகொலைகள் தொடர்பில் வுஜதின் போபோவிச் மற்றும் லுபிச பியெரா ஆகியோருக்கும் ஏனைய இருவருக்கும் அளிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை ஐநாவின் போர்க்குற்றத் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இதே வழக்கு தொடர்பில், நீண்டகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஐந்தாவது நபருக்கான தண்டனையின் காலஅளவு இந்தத் தீர்ப்பாயத்தால் சற்று குறைக்கப்பட்டது.

ஸ்ரெப்ரெனீட்சாவில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட படுகொலைகளில் சுமார் எட்டாயிரம் முஸ்லிம் ஆண்களும், சிறார்களும் கொல்லப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஹோலோகோஸ்ட் யூதப் படுகொலைகளுக்கு பின்னர் நடைபெற்ற மிகவும் மோசமான இனப்படுகொலையாக ஸ்ரெப்ரெனீட்சா சம்பவம் பார்க்கப்படுகிறது.

இப்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐந்துபேரும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த ராட்கோ மிளாடிச்சின் கீழ் நேரடியாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது