வங்கதேசம்: காலிதா ஸியாவின் அலுவலக மின்விநியோகம் துண்டிப்பு

புதிதாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று காலிதா ஸியா கோரிவருகின்றார்
படக்குறிப்பு, புதிதாக பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று காலிதா ஸியா கோரிவருகின்றார்
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவி காலிதா ஸியாவின் அலுவலகத்துக்கான மின்சார இணைப்பை அந்நாட்டு அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

எதிரணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் தொடரும் மோதலின் தொடர்ச்சியாக இது நடந்துள்ளது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையினால் காலிதா ஸியாவின் அலுவலகக் கட்டடத்துக்கான மின்சாரம் மட்டுமன்றி தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளும் தடைப்பட்டுள்ளன.

மூன்று வாரங்களுக்கும் மேலாக காலிதா ஸியா அவரது அலுவலக கட்டடத்துக்குள்ளேயே முடங்கியிருந்தார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சேவைகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மிக அண்மையில் பொது வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த இருதரப்பு மோதல்களால் நடந்துள்ள வன்முறைகளில் கிட்டத்தட்ட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் காலிதா ஸியா கோரிவருகின்றார்.